தமிழ்நாடு

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை அதிகாரிகள் 'கொர்...'

Updated : பிப் 12, 2021 | Added : பிப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாரிமுனை கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான, எருக்கஞ்சேரியில் உள்ள, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இடம், போலி ஆவணங்கள் மூலம், தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். சென்னை, பாரிமுனையில், கந்தக்கோட்டம் கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற
 கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை அதிகாரிகள் 'கொர்...'

பாரிமுனை கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான, எருக்கஞ்சேரியில் உள்ள, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இடம், போலி ஆவணங்கள் மூலம், தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, பாரிமுனையில், கந்தக்கோட்டம் கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில், தற்போது, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.நுாறு ஆண்டுகளுக்கு முன், ஜமின்தார்கள், வாரிசு இல்லாத செல்வந்தர்கள், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என, பல தரப்பினரும் தங்க, வைர நகைகள், கட்டடங்கள், நிலம் ஆகியவற்றை, கோவிலுக்கு தானமாகவும், காணிக்கையாகவும் வழங்கியுள்ளனர். அந்த வகையில், கந்தசாமி கோவிலுக்கு, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

அவற்றை முறையாக பராமரிக்காமலும், பத்திரப்பதிவு செய்யாமலும் விட்டதால், பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில், கொடுங்கையூர் எருக்கஞ்சேரி, கந்தசாமி கோவில் காலனி தெருவில், கோவிலுக்கு சொந்தமான, 1,350 சதுரடி நிலம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு, அங்கு கட்டடம் கட்டும் பணி நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: எருக்கஞ்சேரியில், சர்வே எண், 93/2ல், கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான, 1,350 சதுர அடி நிலம் உள்ளது. அந்த இடத்தை, அதே பகுதியைச் சேர்ந்த, ராஜா என்பவர், '93 பார்ட்' என சர்வே கொடுத்து, கிராம நத்தமாக காண்பித்துள்ளார். பின், அதை மாதவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக பதிவு செய்துஉள்ளார்.

மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த வீட்டை இடித்துவிட்டு, புதிதாக கட்டடம் கட்டி வருகிறார். இதற்கு ஆதாரமாக, போலி ஆவணம் கொடுத்து, பத்திரப்பதிவு செய்த ஆவணங்கள், வில்லங்க சான்று, கட்டுமானப் பணிகள் நடக்கும் புகைப்படங்கள் என, பல ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆதாரங்களை இணைத்து, முத்துக்குமாரசுவாமி கோவில் தேவஸ்தான மூத்த அறங்காவலர், அறநிலையத் துறை செயல் அலுவலர், கோவில் நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் ஆகியோருக்கு, தனித்தனியாக புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை இல்லை; கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தவும் இல்லை. இதை, அறநிலையத் துறை கமிஷனர் நேரில் ஆய்வு செய்து, கோவில் நிலத்தை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணம் மூலம் ஆக்கிரமித்து, அங்கிருந்த கட்டடத்தை அகற்றிய குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, எருக்கஞ்சேரியில் உள்ள கோவில் நிலத்தை, போலி பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்தது தொடர்பாக, எந்த புகார் கடிதமும் தங்களுக்கு வரவில்லை என முதலில் தெரிவித்தனர்.ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதால் இது தொடர்பாக காவல் துறையில், புகார் அளிக்க உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

- நமது நிருபர் --.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
13-பிப்-202109:26:59 IST Report Abuse
SENTHIL NATHAN அரா நிலைய துறை அதிகாரிகள் முட்டாளர்கள் போல நடிக்கும் கொடூர எண்ணம் கொண்டவர்கள்.. கோவில் சொத்து என்பது தெரிந்தும் அதை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் வம்சம் நாசமாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X