படைகள் வாபஸ் ஏன்? ராகுல் கேள்வி

Updated : பிப் 12, 2021 | Added : பிப் 12, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
புதுடில்லி: பான்காங் ஏரி அருகே ‛பிங்கர்4' பகுதியில் இருந்து நமது ராணுவம் விலக்கி கொள்ளப்பட்டது ஏன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது: கிழக்கு லடாக்கின் தற்போதைய சூழல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் அறிக்கை தாக்கல் செய்தார். தற்போது, நமது படை ‛பிங்கர் 3'
Finger 4, RahulGandhiExposesBJP, Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: பான்காங் ஏரி அருகே ‛பிங்கர்4' பகுதியில் இருந்து நமது ராணுவம் விலக்கி கொள்ளப்பட்டது ஏன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது: கிழக்கு லடாக்கின் தற்போதைய சூழல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் அறிக்கை தாக்கல் செய்தார். தற்போது, நமது படை ‛பிங்கர் 3' பகுதியில் நிறுத்தப்பட உள்ளது. தற்போது, ‛பிங்கர் 4' பகுதியில் இருந்து ‛பிங்கர் 3 ' பகுதிக்கு செல்கிறோம். நமது பகுதியை சீனருக்கு ஏன் மோடி கொடுத்தார்? இந்த இடங்களில் இருந்து ராணுவம் விலக்கி கொண்டது ஏன்?

‛பிங்கர் 4' நிலப்பரப்பும் நமது எல்லைக்குட்பட்டதே. அங்குதான் நமது படைகள் முகாமிடுவது வழக்கம். ஆனால், ஏன் நமது நிலப்பரப்பை பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு விட்டுக் கொடுத்தார்?.சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவெனில், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் பயப்படுகிறார். அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது. அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார். ராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இந்த செயலை, இந்தியாவில் ஒருவரும் ஏற்க மாட்டார்கள். நாட்டின் பகுதிகளை காக்க வேண்டியது நமது கடமை. எப்படி, இந்த பிரச்னையை தனது பிரச்னை இல்லை என நினைக்கிறார்.


latest tamil newsஎல்லைகளை காக்க நமது ராணுவம், விமானப்படை, கடற்படை தயாராக உள்ளது. இந்திய படைகள் கைப்பற்றிய பகுதியை, சீனாவிற்கு பிரதமர் கொடுத்து விட்டார். ஏப்ரல் முதல் எல்லையில் பிரச்னை நிலவி வருகிறது. தற்போதுவரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
13-பிப்-202100:15:49 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இந்த ராகுல் எப்படி காங்கிரசின் அகில இந்திய தலைவராக இருந்தார் என்பதே ஒரு விசித்திரமாக உள்ளது. இந்தியா பிங்கர் பாயிண்ட் எட்டு வரை இந்திய எல்லை என்று சொந்தம் கொண்டாடி அத்துடன் தற்போது இரு தரப்பு பேச்சு வார்த்தையின் அடிப்படியில் இரு ராணுவத்தினரும் தற்போதுள்ள நிலையில் இருந்து விலகிக்கொள்ள முடிவு செய்து அதன்படி செயல்படுகின்றன. மேலும் எல்லை நிலவரத்தில் ராணுவமும் அரசும் மேல்மட்ட பேச்சு நடத்திக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிக்கை விடுவது மிகவும் தவறு. கடந்த ஜூன் மாதம் நம் படை வீரர்கள் இருபது பேர் இறந்தபோது சீன ராணுவத்தினர் நாற்பத்து ஐந்து பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று நேற்று ரஷிய பத்திரிகை டாஸ் வெளியிட்டு உள்ளது. ஆனால் இதே ராகுல் சீனா சைடில் யாருமே இறக்கவில்லை என்று அறிக்கை விட்டு நம்முடைய ராணுவத்தை கொச்சை படுத்துகிறார். வெட்கக்கேடு.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-பிப்-202120:52:23 IST Report Abuse
மலரின் மகள் சாமானிய மக்கள் இந்த விஷயத்தை பற்றி அலட்டி கொள்ளவே இல்லை. அது அவர்களின் பரிபூரண நம்பிக்கையினால். உள்மனது எல்லோருக்கும் சொல்கிறது. அதை தாராளமாக கேட்டுணரலாம். நமது ராணுவமும் நமது பிரதமரும் மிக தீர்க்கமாக மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் அதில் எந்த அச்சமும் இல்லை. அனைவருக்கும் பிரதமரின் தலைமையின் மீது இந்த விச்யத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது. அவரும் மிகவும் சிறப்பாகவே செயல்படுகிறார். நமது கவுரவம் வெளிநாட்டில் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் சிறப்பு பெறட்டும். பாரத் மாதாகி ஜெய்.
Rate this:
Cancel
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
12-பிப்-202118:57:48 IST Report Abuse
Gopalakrishnan Ra இவன் கொஞ்சநாள் காங்கிரஸ் தலைவனாக இருந்தால் , காங்கிரஸ் முற்றிலும் அழிந்துபோகும். இதில் சந்தேகம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X