கொரோனா, உய்குர் முஸ்லிம் பற்றி செய்தி; பிபிசி சேனலுக்கு தடை விதித்த சீனா

Updated : பிப் 12, 2021 | Added : பிப் 12, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
பீஜிங்: சீனா அரசு கொரோனா தொற்றை கையாண்ட விதம் மற்றும் உய்குர் முஸ்லிம் குறித்து செய்தி வெளியிட்ட பிபிசி சேனலுக்கு சீனா அரசு தடை விதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை ஆய்வு செய்ய உலக
BBC_NewsChannel, Ban, China, Corona, Uyghur Muslim, பிபிசி, செய்தி சேனல், சீனா, தடை

பீஜிங்: சீனா அரசு கொரோனா தொற்றை கையாண்ட விதம் மற்றும் உய்குர் முஸ்லிம் குறித்து செய்தி வெளியிட்ட பிபிசி சேனலுக்கு சீனா அரசு தடை விதித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு சீனா சென்றுள்ளது.

அதேநேரத்தில் சீனாவின் மீது மற்றுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டும் உள்ளது.


latest tamil news


இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், உய்குர் முஸ்லிம் பிரச்னை குறித்து தவறான செய்திகளை பிபிசி சேனல், செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியது. இதையடுத்து, பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா அரசு தடை விதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனாவின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் இது குறித்து கூறுகையில், 'சீனாவின் நடவடிக்கை கருத்து ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது' எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல், அமெரிக்காவும் சீனாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangarajan Srinivasan - Hosur,இந்தியா
13-பிப்-202109:33:39 IST Report Abuse
Rangarajan  Srinivasan சீனாவின் நடவடிக்கைகள் பல விஷயங்களில் நம் யாருக்கும் உடன்பாடில்லை தான். ஆனால் குறிப்பிட்ட இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை யாருமே கவனிக்கவில்லை. சீனாவின் ஒரு ஒளிபரப்பு சேனலை, பிரிட்டன் ஒழுங்குமுறை ஆணையம் பிரிட்டனில் சில காரணங்களைக் கூறி தடை செய்தது. இதற்கு எதிர் வினையாகத்தான் சீனாவும் தடை செய்தது. இந்த இரண்டு தடைகளும் ஒரே காரணங்களுக்காகவா, ஒப்பீடு இவைகள் ஒரு புறம். ஆனால் முதலில் மேற்கத்திய நாடுகளில் நடப்பவைகள் பேசப்படுவதே இல்லை.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-பிப்-202122:48:09 IST Report Abuse
Saravanan பிபிசியை இந்தியாவும் தடை செய்ய வேண்டும் அது மட்டுமில்லாமல் நம் நாட்டில் இருக்கும் திருட்டு ஊடகங்களையும் தடை செய்ய வேண்டும்
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
12-பிப்-202119:57:37 IST Report Abuse
தமிழ்வேள் பிபிசி யின் தமிழ் வெப் சைட்டை முதலில் தடைசெய்யவேண்டும் ....அதிமேதாவித்தனமாக செய்திகள் போடுவதாக விமர்சனம் செய்வதாக எண்ணிக்கொண்டு , இந்திய துரோகம் தமிழ் பிரிவினைவாதத்தை அதிகமாக முன்னெடுத்துக்கொண்டுள்ளது ..அத்தனையும் விஷம் .....ஹிந்து விரோதம் இந்திய விரோதம் கொடிகட்டி பறக்கும் ஆபிரகாமிய விஷ வெப் சைட் இந்த பிபிசி சைட் ..தடை செய்தல் மிக அவசியம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X