பராமரிப்பு கட்டணம் செலுத்த முடியாது: கேரள கோயில் நிர்வாகம் கைவிரிப்பு

Updated : பிப் 12, 2021 | Added : பிப் 12, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
திருவனந்தபுரம் : 'கொரோனா பரவலால் வருமானம் குறைந்ததால் கேரள அரசுக்கு 11.7 கோடி ரூபாயை செலுத்த முடியவில்லை' என பத்மனாப சுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.கேரள திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மனாப சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் 'கோவிலை


திருவனந்தபுரம் : 'கொரோனா பரவலால் வருமானம் குறைந்ததால் கேரள அரசுக்கு 11.7 கோடி ரூபாயை செலுத்த முடியவில்லை' என பத்மனாப சுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.latest tamil news
கேரள திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மனாப சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் 'கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கே உள்ளது' என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

மன்னர் குடும்பம் பொறுப்பேற்கும் வரை மாவட்ட நீதிபதி தலைமையில் கோவிலை நிர்வகிக்க இரண்டு குழுக்களையும் அமைத்தது. கோவில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்குச் செலவு செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் 'அந்த தொகையை கோவில் நிர்வாகம் திரும்ப வழங்க வேண்டும்' என்றும் கூறியது.


latest tamil newsகொரோனா பரவல் காரணமாக பத்மனாப சுவாமி கோவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. பின் ஆகஸ்டில் திறக்கப்பட்டது.கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து அக்டோபரில் கோவில் மீண்டும் மூடப்பட்டு சமீபத்தில் தான் திறக்கப்பட்டது. குறைந்த அளவு பக்தர்களே கோவிலுக்குள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கோவிலை நிர்வகிக்கும் குழு தெரிவித்ததாவது: கோவில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக கேரள அரசு கடந்த ஆண்டு 11.7 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கொரோனா பரவலால் கோவிலுக்கு கடந்த ஆண்டு வருமானம் பெரிதும் குறைந்து விட்டது.

இதனால் கேரள அரசுக்கு 11.7 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்த தொகையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குழு தெரிவித்தது.இதற்கு நீதிபதிகள் 'இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. உங்கள் கோரிக்கை கேரள அரசுக்கு அனுப்பப்படுகிறது. கேரள அரசு தான் இது பற்றி முடிவெடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SHANKER RAMASWAMY - chennai,இந்தியா
18-பிப்-202117:34:14 IST Report Abuse
SHANKER RAMASWAMY கோவிலை நிர்வகிக்க இரண்டு குழுக்களையும் அமைத்த உச்ச நீதிமன்றம் 'அந்த தொகையை வழங்க வேண்டும்'.
Rate this:
Cancel
SUBRAMANIAN P - chennai,இந்தியா
13-பிப்-202119:30:46 IST Report Abuse
SUBRAMANIAN P இங்கே சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை. சட்டத்தை ஆளும் அரசே தங்களுக்கு சாதகமாக வளைத்துக்கொள்கிறது. இந்து அறநிலையத்துறை என்பதை கலைத்துவிட்டு பொத்தாம் பொதுவாக அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் அரசே ஏற்று நடத்தினால் மதசார்பற்ற அரசாக இருக்கும். இல்லையென்றால் அது இந்து எதிர்ப்பு அரசுதான். கேரளாவில் நடப்பது இந்து எதிர்ப்பு அரசு.
Rate this:
Cancel
13-பிப்-202112:17:50 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் :: M R RADHA சொன்னது தான் , நமக்கு கஷ்டம் என்று கோயிலுக்கு போனால் அங்கே கோவிலில் சாமி SPL தரிசனத்திற்கு 100 என்று போர்டு மாட்டி இருந்தான், சரி நம்மளை விட கடவுளுக்கு ரொம்ப கஷடம் என்று வந்து விட்டேன் அது தான் கவனத்திற்கு வருகிறது...
Rate this:
Anand - chennai,இந்தியா
13-பிப்-202119:14:57 IST Report Abuse
Anandஅப்படி சொன்ன ராதாவே கடேசியில் அந்த முருக கடவுளுக்கு காவடி தூக்கினான், மொதல்லே உன்னோட முதுகை பாரு ....எம் மதம், கடவுளை பற்றி பேச அருகதை அற்றவர்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X