பொது செய்தி

இந்தியா

சந்தா கோச்சாருக்கு கிடைத்தது 'ஜாமின்'

Updated : பிப் 12, 2021 | Added : பிப் 12, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை : சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாருக்கு, 5 லட்சம் ரூபாய் பிணையில், ஜாமின் வழங்கப்பட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், 'வீடியோகான்' நிறுவனத்திற்கு, 300 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்திற்கு, 64 கோடி ரூபாய் ஆதாயம் பெற்றுத் தந்ததாக, அமலாக்கத்
சந்தா கோச்சார், 'ஜாமின்'

மும்பை : சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாருக்கு, 5 லட்சம் ரூபாய் பிணையில், ஜாமின் வழங்கப்பட்டது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், 'வீடியோகான்' நிறுவனத்திற்கு, 300 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்திற்கு, 64 கோடி ரூபாய் ஆதாயம் பெற்றுத் தந்ததாக, அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் துாத், உள்ளிட்டோர் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டப்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil news


கடந்த, ஜன., 30ல், 'குற்றஞ்சாட்டப்பட்டோர் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும்' என, சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நேற்று, சந்தா கோச்சார், சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி, ஏ.ஏ.நந்த்கோன்கர் தலைமையிலான அமர்வு முன் ஆஜரானார்.

அப்போது, சந்தா கோச்சார், தன் பதவியை பயன்படுத்தி ஆதாயம் பெற்றதற்கு ஆதாரங்கள் உள்ளதாக, நீதிபதி தெரிவித்தார். உடனே, சந்தா கோச்சாருக்கு ஜாமின் கோரி, அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, 'சந்தா கோச்சார், 5 லட்சம் ரூபாய் பிணைப் பத்திரம் வழங்கி, ஜாமினில் செல்லலாம்' என, அமர்வு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-பிப்-202123:14:19 IST Report Abuse
Ramesh Sargam நம்ம நாட்டு கறிகாய் மார்க்கெட்டுல கொத்தமல்லி கட்டு கிடைக்காமல் போகலாம். ஆனால், நம்ம நாட்டு கோர்ட்டுல (நீதிமன்றங்களில்) இந்த ஜாமீன் கிடைக்காமல் போகவே போகாது. ஒரு குற்றவாளிக்கு அவ்வளவு ஈஸியா நமது நீதிமன்றங்கள், இந்த ஜாமீனை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். வெட்கம். வேதனை.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-பிப்-202119:38:01 IST Report Abuse
தமிழவேல் இதுபோல ஜாமீன் தரும்போது, சொத்துக்களையும் உடனடியாக முடக்கி வைக்க வேண்டும்..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-பிப்-202117:45:45 IST Report Abuse
J.V. Iyer ஊழல் செய்பவர்கள் பயங்கரவாதிகளைவிட மோசமானவர்கள். அதிலும் விஞ்ஞான ஊழல் செய்தவர்களை உடனே வேரறுக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X