அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு 'செக்': வீரம் காட்டும் கமல்

Updated : பிப் 14, 2021 | Added : பிப் 12, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
சென்னை :'கமலை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி' என மக்கள் நீதி மய்யம் முடிவு எடுத்துள்ளது. மேலும் தி.மு.க. வின் 'பெரியண்ணன்' போக்கு பிடிக்காமல் வெளியேறும் கட்சிகளை கூட்டணியில் இணைக்க கமல் திட்டமிட்டுள்ளதும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கருணாநிதி ஜெயலலிதா என இரண்டு முக்கிய தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் நேற்று
Kamal, Kamal Haasan, MNM, MK Stalin, stalin, DMK,  ஸ்டாலின், செக், வீரம், கமல்

சென்னை :'கமலை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி' என மக்கள் நீதி மய்யம் முடிவு எடுத்துள்ளது. மேலும் தி.மு.க. வின் 'பெரியண்ணன்' போக்கு பிடிக்காமல் வெளியேறும் கட்சிகளை கூட்டணியில் இணைக்க கமல் திட்டமிட்டுள்ளதும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதி ஜெயலலிதா என இரண்டு முக்கிய தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் நேற்று முளைத்த கட்சிகள் கூட முதல்வர்நாற்காலிக்கு துண்டு போட ஆர்வமாக உள்ளன. அ.தி.மு.க. - தி.மு.க. இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்சிகளுடன் பேச்சை நடத்தி வருகின்றன.தி.மு.க. கூட்டணிக்கு கமலை இழுக்க பல கட்ட முயற்சிகள் தொடர்கின்றன. கமல் எப்படியும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் 'கமலை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி' என பொதுக்குழுவில் மக்கள் நீதி மய்யம் திட்டவட்டமாக முடிவு எடுத்துள்ளது. இதனால் தி.மு.க. - கமல் கூட்டணி கானல் நீராகி விட்டதை அக்கட்சி நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர்.கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டிய உரிமையையும் மக்கள் நீதி மய்ய பொதுக்குழு கமலுக்கு வழங்கியுள்ளது. கமல் கூட்டணியில் இணைய ஆம் -ஆத்மி தயாராகி விட்டது. தி.மு.க.வில் 'சீட்' பேரம் சரியாக அமையா விட்டால் கம்யூ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும் கமல் தயாராகி வருகிறார்.

அதேபோல தொகுதி பங்கீடு சரியாக அமையாமல் போனால் தி.மு.க.வில் இருந்து வெளியேறி காங்கிரசும் தன்னுடன் சேரலாம் என கணக்கு போட்டு கமல் காய் நகர்த்தி வருகிறார். இதையே அவர் 'எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்' என பேசி வருகிறார். கமலின் கூட்டணி வியூகம் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
21-பிப்-202105:47:48 IST Report Abuse
Siva Kumar இந்த தேர்தல் முடிவில் பல கட்சிகள் காணாமல் போனால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-202117:14:09 IST Report Abuse
Abdul Aleem தளபதி தனியாக நின்றாலே வெற்றிபெறுவர் யாரும் வேண்டாம் தலைவரே ஏன் நீக்க ஒன்றும் தெரிய ஆளையெல்லாம் பெரியலாக ஆக்குகிறீர்கள்
Rate this:
Cancel
15-பிப்-202117:23:16 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) இரண்டு ஊழல் கலகங்களும் ஊழல் பணத்தில் பல்லாயிரம் கோடி தேர்தலுக்காக செலவழிப்பார்கள் ,எல்லாம் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணம் ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X