சீனாவின் போக்கு: அமெரிக்க அதிபர் கவலை

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
வாஷிங்டன்: சீனாவின் மிரட்டல் போக்கு, நியாயமற்ற பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவை குறித்து, அந்நாட்டு அதிபர், ஜிங்பிங்கிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகை செய்தி பிரிவு செயலர் ஜென் பெசக்கி கூறியதாவது:‛ஜோ பைடன் பதவியேற்ற பின், முதன்முறையாக நேற்று ஜிங்பிங்கை தொடர்பு கொண்டார். சீனாவின் ஏகாதிபத்திய முயற்சி, மிரட்டல் போக்கு, நியாயமற்ற
china, america, joe biden, president, சீனா, அமெரிக்கா, போக்கு, ஜோ பைடன், கவலை

வாஷிங்டன்: சீனாவின் மிரட்டல் போக்கு, நியாயமற்ற பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவை குறித்து, அந்நாட்டு அதிபர், ஜிங்பிங்கிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தி பிரிவு செயலர் ஜென் பெசக்கி கூறியதாவது:‛ஜோ பைடன் பதவியேற்ற பின், முதன்முறையாக நேற்று ஜிங்பிங்கை தொடர்பு கொண்டார். சீனாவின் ஏகாதிபத்திய முயற்சி, மிரட்டல் போக்கு, நியாயமற்ற பொருளாதார நடவடிக்கைகள், தைவான் விவகாரம், ஹாங்காங் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, ஜோ பைடன், ஜிங்பிங்கிடம் பேசினார்.' இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news



அதிபர் ஜோ பைடன், அமெரிக்க ராணுவ அதிகாரி எலி ரட்னர் தலைமையில், சீன அதிரடி படை என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளார். இது, சீனாவின் செயல்பாடுகளை கண்காணித்து, விபரங்களை, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு வழங்கும். என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
13-பிப்-202119:10:22 IST Report Abuse
Narayanan இப்போ இருக்கும் டெக்னாலஜி ஒரு மொழியை தன் மொழிக்கு மாற்றும் திறன் இருப்பதாக சொல்கிறார்கள் .இது உண்மையானால் யாரும் யாருடனும் எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம்தானே .
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
13-பிப்-202118:13:22 IST Report Abuse
Somiah M அமெரிக்க தலைமைக்கு ஒரு வியாபாரியைவிட ஒரு அரசியல்வாதி கிடைத்திருப்பது மேன்மை தான் .உலக சுகாதார அமைப்பின் கடந்த கால நடவடிக்கைகளுக்கு பின்னும் அதன் நம்பக தன்மை ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறதா ?
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-பிப்-202118:01:02 IST Report Abuse
Nagarajan D டிரம்ப் போலவே ஜோ பிடெனும் ஆரம்பித்துவிட்டார்... ஒவ்வொரு நாள் ஒரு டயலாக் நேற்று சொன்னதிலிருந்து நேர் மாறாக இன்று....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X