பொது செய்தி

இந்தியா

தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல்

Added : பிப் 13, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுச்சேரி :''தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணந்து இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்,'' என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தெரிவித்தார்.புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்ய, புதுச்சேரி வந்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜிவ்குமார் ஆகியோர், நேற்று முன்தினம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல்

புதுச்சேரி :''தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணந்து இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்,'' என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தெரிவித்தார்.புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்ய, புதுச்சேரி வந்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜிவ்குமார் ஆகியோர், நேற்று முன்தினம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிநிதிகளை சந்தித்து, கருத்துகளை கேட்டறிந்தனர்.


latest tamil news




நேற்று காலை, அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம் செய்தனர். பின், மத்திய, மாநில தேர்தல் அமலாக்க பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அளித்த பேட்டி:
புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட, 10 அரசியல் கட்சிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தலைமை செயலர், டி.ஜி.பி., யுடன் ஆலோசனை நடந்தது. பாரபட்சமின்றி, வெளிப்படை தன்மையுடன் தேர்தலை நடத்துவோம்.தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, வெளிநாட்டு இந்தியர்களுக்கு, 'ஆன்லைன்' ஓட்டுரிமை தருவது, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை சரி செய்யுமாறு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரினர்.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, புதுச்சேரியில் மூன்று நியமன எம்.எல்.ஏ., க்களுக்கு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு, பட்ஜெட்டில் ஓட்டளிக்க உரிமை உள்ளது என கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணந்து இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்.
கொரோனா காரணமாக, புதுச்சேரியில் உள்ள, 952 ஓட்டுச் சாவடிகளை, 1,564 ஆக உயர்த்தி உள்ளோம்.

தேர்தல் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து, கொரோனா தடுப்பூசி போட தலைமை செயலரை அறிவுறுத்தி உள்ளோம்.பணம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும், 16ம் தேதி, மத்திய வருமான வரி, சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, ஐந்து மாநிலத் தேர்தலில் செய்ய வேண்டிய முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.'புதுச்சேரியில் குறைந்தது, 10 ஆயிரம் வாக்காளர்களை பரிசு பொருட்கள் கொடுத்து விலைக்கு வாங்கினாலே, எளிதாக வெற்றி பெறலாம். தேர்தல் முடிவு ஒரு தலைபட்சமாக மாறுமே' என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சுனில் அரோரா கூறுகையில், ''வட கிழக்கு மாநிலங்களில், 200 வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் கூட உள்ளன. அங்கு பாரபட்சமின்றி, நேர்மையாக தேர்தலை நடத்தியுள்ளோம். புதுச்சேரி பெரிய விஷயம் இல்லை. வேட்பாளர் செலவு தொகை, 20 லட்சத்தில் இருந்து, 22 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-202117:42:40 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மக்களை குடிகார்களாகவும் சோம்பேரிகளாகவும் ஆக்கி விட்டனர் இந்த ஊழல் கழக அரசியல்வாதிகள்.
Rate this:
Cancel
13-பிப்-202117:41:27 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மக்கள் மாறாதவரை மாற்றம் என்பது சாத்தியம் ???
Rate this:
Cancel
I LOVE MY INDIA - CHENNAI,குவைத்
13-பிப்-202109:44:30 IST Report Abuse
I LOVE MY INDIA இப்படி செய்தால் நாங்க எப்படி ரெண்டு இடத்துல வோட்டு போடா முடியும். இது ஆளும் கட்சி சதி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X