இது உங்கள் இடம்: இனி நேர்மைக்கு இடமில்லை

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (68) | |
Advertisement
உலக நாடு தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:கடந்த, 1967 தேர்தலில், காமராஜர் தோல்வி அடைந்து, காங்கிரஸ் கட்சி தன் ஆட்சியைப் பறிகொடுத்தது; அப்போதே அதனுடன் சேர்ந்து, தமிழகத்தில் நேர்மையான ஆட்சிக்கு மூடு விழா காணப்பட்டது.தி.மு.க.,வை தோற்றுவித்த அண்ணாதுரை ஆட்சி செய்த குறுகிய
நேர்மை, இடம், இல்லை, honest, no place,


உலக நாடு தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்



கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த, 1967 தேர்தலில், காமராஜர் தோல்வி அடைந்து, காங்கிரஸ் கட்சி தன் ஆட்சியைப் பறிகொடுத்தது; அப்போதே அதனுடன் சேர்ந்து, தமிழகத்தில் நேர்மையான ஆட்சிக்கு மூடு விழா காணப்பட்டது.தி.மு.க.,வை தோற்றுவித்த அண்ணாதுரை ஆட்சி செய்த குறுகிய காலத்தில், ஊழல் புகார் ஏதுமில்லை.

ஆனால், அவரது மறைவுக்கு பின் பதவி ஏற்ற கருணாநிதி, தன் ஆட்சியில் ஊழலுக்கு பச்சைக் கொடி காட்டினார். தி.மு.க.,வினர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி கணக்கு கேட்ட, எம்.ஜி.ஆரை, கட்சியை விட்டே நீக்கினார், கருணாநிதி.அதாவது நேர்மை என்றால், கருணாநிதிக்கு பிடிக்காது என்பதை, எம்.ஜி.ஆரை நீக்கி நிரூபித்தார்.ஆனால், எம்.ஜி.ஆர்., தன் செல்வாக்கால், அ.தி.மு.க., கட்சியைத் துவக்கி, ஆட்சியைப் பிடித்தார். தான் உயிரோடு இருந்த வரையில், கருணாநிதியால் ஆட்சிக் கட்டிலின் பக்கம் தலை வைத்து படுக்க முடியவில்லை.

எம்.ஜி.ஆர்., ஆட்சி செய்த முதல் சில ஆண்டுகள், அமைச்சர்கள் யாரையும் தவறு செய்யவிடாமல், ஆட்சி செய்தார்; ஆனால், அதன் பின் அமைச்சர்களை அடக்க முடியவில்லை.எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் ஆட்சியில், மெகா ஊழல்கள் அரங்கேறின. அதனால், 1996 தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது.

ஜெ., ஆட்சியில் இருந்தபோது, அவரின் உடன்பிறவா சகோதரி சசிகலா குடும்பத்தினர், அதிகார மையமாக செயல்பட்டு, பல கோடி ரூபாய் சொத்து குவித்தனர்.நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, தற்போது வெளியே வந்திருக்கும் சசிகலாவை, சிலர் வரவேற்கின்றனர்.சசிகலா என்ன தமிழக மக்களுக்காக போராடிய குற்றத்திற்காகவா சிறை சென்றார்?


latest tamil news


ஊழலுக்கு எதிராக கட்சி துவக்கிய, எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு எதிராக, அக்கட்சியில் உள்ள சிலர் செயல்படுவது, அவருக்கு செய்யும் துரோகம் அல்லவா?கருணாநிதியின் ஆட்சியில் துவங்கிய ஊழல் அரசியல், இன்று சசிகலாவிற்கு வரவேற்பு கொடுக்கும் அளவிற்கு வந்து விட்டது.தமிழக அரசியலில் நேர்மை, குழி தோண்டி, ஆழ புதைக்கப்பட்டு விட்டது. இனி அரசியலில், நேர்மையானவருக்கு இடமே இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
14-பிப்-202104:41:20 IST Report Abuse
மிளிர்வன் எங்கியோ போட்டாபாத்துல அமெரிக்க'காரன் ஒருத்தன..சுடுறா'ப்புல சுட்டு கடல்ல முக்கிட்டானாம்.. எங்கியோ வெள்ளைக்காரன் கார்ட்டூன் போட்டு பே(ஏ)சிட்டானாம்.. அதுக்கு இங்க சென்னையில கலவரம் பண்ணினவங்க ஓட்டுக்காக டீம்க்கா'வுக்கு வோட்டு போட்டா தமிழ்நாடு நித்த கலவர பூமியாயிடும்..
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
14-பிப்-202104:30:13 IST Report Abuse
மிளிர்வன் சங்கி, சிங்கி'ன்னு சொல்லுவான்.
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
14-பிப்-202104:24:54 IST Report Abuse
மிளிர்வன் Bad is best comparing to Worst' ன்னு ஒரு சொலவடை இருக்கு.. அதன்படியும் பிஜேபி தான் இன்றைய சூழலுக்கு பெஸ்ட்.. ஒருத்தர் சொல்றாரு ஊழல் இல்லாமல் கச்சி இருக்கமுடியாது'ன்னு.. அப்போ அதையும் பிஜேபியே செய்யட்டும்.. மற்றவங்க எல்லாம் போயி பக்கிஸ்தானத்துல செய்யட்டுமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X