இந்தியா

மகிழ்ச்சி: மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு: பள்ளிகள் முழு நேரம் இயங்கவும் உத்தரவு

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : -பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை மீண்டும் துவக்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த வாரத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து, அக்டோபரில் பள்ளிகள் திறந்து, 9ம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வகுப்பு வரையிலான
 மகிழ்ச்சி: மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு: பள்ளிகள் முழு நேரம் இயங்கவும் உத்தரவு

புதுச்சேரி : -பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை மீண்டும் துவக்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த வாரத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து, அக்டோபரில் பள்ளிகள் திறந்து, 9ம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் நடத்தப்பட்டன.கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 4ம் தேதி, 1ம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 18ம் தேதி முதல் பள்ளிகள் முழுதுமாக திறக்கப்பட்டு, காலை 9:30 மணி முதல், மதியம் 12:30 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன. பள்ளிகள் திறந்த போதும், கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட மதிய உணவு திட்டம் செயல்படுத்தவில்லை. அதுபோல, கருணாநிதி பெயரிலான காலை சிற்றுண்டி திட்டமும் துவக்கவில்லை.மதிய உணவு வழங்காததால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் பசியுடன் வீட்டுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மதிய உணவு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ருத்ர கவுடு மற்றும் அதிகாரிகளை அழைத்து அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, மதிய உணவு திட்டத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசின் ஒப்புதலை பெற கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில், பள்ளிகளில் மதிய உணவு மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 70 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அரசு முடுக்கி விட்டுள்ளது. பள்ளிகள் தற்போது காலை 9:30 மணிக்கு துவங்கி, மதியம் 12:30 மணி வரை அரை நாள் மட்டுமே நடக்கிறது. மதிய உணவு திட்டம் துவக்கப்படும் நாளில் இருந்து பள்ளிகள் முழு நேரமும் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் மதிய உணவுபள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி மதிய உணவு திட்டத்தை உடனடியாக துவக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுளேன். பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு அடுத்த வாரத்தில் இருந்து வழங்கப்படும்.மத்திய உணவு கூடத்தில் உணவு சமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.கமலக்கண்ணன்,கல்வித் துறை அமைச்சர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X