கலப்பு திருமணங்களால் சமூகத்தில் பதற்றம் குறையும்: உச்ச நீதிமன்றம்

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
புதுடில்லி: 'கலப்பு திருமணங்கள் வாயிலாக, ஜாதி, மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் பெரும் அளவில் குறையும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதுபெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி, சமீபத்தில் திருமணம் செய்தார்.இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெண் மற்றும் அவரது கணவர் மீது,

புதுடில்லி: 'கலப்பு திருமணங்கள் வாயிலாக, ஜாதி, மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் பெரும் அளவில் குறையும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதுlatest tamil news


பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி, சமீபத்தில் திருமணம் செய்தார்.இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெண் மற்றும் அவரது கணவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, பெண் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், தங்கள் விருப்பப்படி இணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்கின்றனர். இதன் வாயிலாக, ஜாதி, மதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சமூகத்தில், தற்போது மிகப்பெரிய மாற்றம் உருவாக துவங்கியுள்ளது. கலப்பு திருமணங்கள் அதிகரிப்பதன் வாயிலாக, ஜாதி, மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் வெகுவாக குறையும்.


latest tamil news


கலப்பு திருமணங்கள் செய்யும் இளைய சமூகத்தினருக்கு, மூத்தவர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. அதுபோன்ற நேரங்களில், நீதிமன்றம் தலையிட்டு, இளைய தலைமுறையினரை காக்க வேண்டிய நிலை உள்ளது.இது போன்ற புகார்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, போலீசாருக்கு வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
14-பிப்-202104:56:25 IST Report Abuse
Milirvan ஐயையோ.. சாத்தான கொம்புடறாங்கோ.. நாங்கோ சார்பட்டா சிலுவ.. நாங்கோ அமுதியானவுங்கோ.. மத்தவுங்கோ காப்பீரு'ன்னு சொல்லாம வுட்டாலும் பதற்றம் குறையும்'ன்னு சொல்ல தகிரியம் இருக்கா நீதிபெதி..?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-பிப்-202122:57:36 IST Report Abuse
தமிழவேல் இதுக்கெல்லாம் போலி பேசுங்க புகார் பதிவானுவோ...
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
13-பிப்-202120:55:40 IST Report Abuse
Nallavan Nallavan லவ் ஜி-ஹாத் ஐ ஆதரிக்கும் நீதிமன்றங்களுக்கு நன்றி ........... நாங்கள் படு சுத்தமாக விக்கிரக வழிபாட்டாளர்களைத் துடைத்தெறிய இது உதவும் ...........
Rate this:
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
13-பிப்-202122:14:13 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு:: M R RADHA சொன்னது தான் , நமக்கு கஷ்டம் என்று கோயிலுக்கு போனால் அங்கே கோவிலில் சாமி SPL தரிசனத்திற்கு 100 என்று போர்டு மாட்டி இருந்தான், சரி நம்மளை விட கடவுளுக்கு ரொம்ப கஷடம் என்று வந்து விட்டேன் அது தான் கவனத்திற்கு வருகிறது... திருட்டு பசங்கள் எவ்வளவு சொன்னாலும் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X