பொது செய்தி

இந்தியா

ஆட்டோ டிரைவர் மகள் அழகி போட்டியில் வெற்றி

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
மும்பை: பெமினா' இதழ் நடத்திய, இந்திய அழகிப் போட்டியில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மகள், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.உத்தரபிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, குஷி நகரில் வசிப்பவர் மான்யா. இவரது தந்தை ஆட்டோ ஓட்டுகிறார். காலையில் கல்லுாரி, மாலையில் வீட்டு வேலை, இரவு, 'கால்சென்டரில்' பணி என, நாள்

மும்பை: பெமினா' இதழ் நடத்திய, இந்திய அழகிப் போட்டியில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மகள், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.



latest tamil news


உத்தரபிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, குஷி நகரில் வசிப்பவர் மான்யா. இவரது தந்தை ஆட்டோ ஓட்டுகிறார். காலையில் கல்லுாரி, மாலையில் வீட்டு வேலை, இரவு, 'கால்சென்டரில்' பணி என, நாள் முழுதும் உழைக்கும் மான்யாவுக்கு,அழகுக் கலையில் அதீத ஆர்வம் உண்டு.

மிஸ் இண்டியா அழகி போட்டியில் ஆட்டோ டிரைவர் மகளுக்கு 2ம் இடம்! உறுதியுடன் போராடினால் வெற்றி நிச்சயம்

அதனால், 'வி.எல்.சி.சி., பெமினா மிஸ் இந்தியா' அழகிப் போட்டிக்கு விண்ணப்பித்து, படிப்படியாக பல கட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றார். சமீபத்தில் மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில், மான்யா, 'மிஸ் இந்தியா' அழகியாக, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.


latest tamil news


''சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும், முயற்சியை கைவிடாமல் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம்,'' என்கிறார், மான்யா. இப்போட்டியில்,தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா, ' பெமினா மிஸ் இந்தியா' அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-பிப்-202122:15:08 IST Report Abuse
Ramesh Sargam ஆட்டோ டிரைவர் மகள் அழகி போட்டியில் வெற்றி பெறக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? முதலில் இதுபோன்ற தலைப்பினை (headlines) பத்திரிகைகள் போடுவதை உடனே நிறுத்தவேண்டும். வாழ்த்துக்கள் மான்யாவுக்கு.
Rate this:
Cancel
maharaja - திருநெல்வேலி,இந்தியா
13-பிப்-202121:02:47 IST Report Abuse
maharaja அழகுக்கும் ஆட்டோ ரிக்சாக்கும் என்னப்பா இருக்கு. தன்னுடைய உழைப்பால் உயர்ந்த நடிகை ன்னு சொல்லும்போது அவ்வளவு கோபம் வரும் பாருங்க.
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
13-பிப்-202120:18:50 IST Report Abuse
mohan இந்திய பெண்கள், தங்களது திறமையை, அரசு தேர்வு துறைகளில் காமிக்க வேண்டும்.....அது தான் நாட்டிற்கு, சமுதாயத்திற்கு பெருமை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X