இன்னோவாவைத் தவிர வேற நிறைய அயிட்டம்களும் கைக்கு வந்து சேர்ந்திடிச்சு போல...

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கட்சியினர், 'தி.மு.க., ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி' என, பொய் பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.,வினர் பலரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்; கோவிலுக்கு செல்பவர்கள். எனவே, தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரானது என்ற பொய் பிரசாரத்தை, அவர்கள் கைவிட வேண்டும்.- தி.மு.க., பேச்சாளர் நாஞ்சில் சம்பத்'இன்னோவாவைத் தவிர, வேற நிறைய, 'அயிட்டம்'களும் கைக்கு வந்து
இன்னோவாவைத் தவிர வேற நிறைய அயிட்டம்களும் கைக்கு வந்து சேர்ந்திடிச்சு போல...

பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கட்சியினர், 'தி.மு.க., ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி' என, பொய் பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.,வினர் பலரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்; கோவிலுக்கு செல்பவர்கள். எனவே, தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரானது என்ற பொய் பிரசாரத்தை, அவர்கள் கைவிட வேண்டும்.
- தி.மு.க., பேச்சாளர் நாஞ்சில் சம்பத்


'இன்னோவாவைத் தவிர, வேற நிறைய, 'அயிட்டம்'களும் கைக்கு வந்து சேர்ந்திடிச்சு போல...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேச்சு.



மத்திய அரசு அளிப்பது போன்ற இழப்பீடு, மாநிலத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுள்ளனர். இதுவரை வேறு எந்த மாநிலமும் அதுபோன்ற நஷ்டஈடு வழங்கவில்லை. இருந்தபோதிலும், அவர்களின் கோரிக்கைகளை, முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- அமைச்சர் தங்கமணி


'இது தான் நியாயமான பேச்சு; இப்படித் தான், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி பேட்டி.



தி.மு.க., தலைவர், சுயமாக சிந்திக்கிற நிலையில் இல்லை. எங்களை, பா.ஜ., இயக்குவதாக கூறுகிறார்; எங்களை யாரும் இயக்கவில்லை; சுயமாக செயல்படுகிறோம்.
- அமைச்சர் ராஜு


latest tamil news




'தி.மு.க.,வை இயக்குவது, தி.க.,வாக இருக்குமோ; அதனால் தான், அ.தி.மு.க.,வை, பா.ஜ., இயக்குகிறது என்கிறாரோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக செய்தித் துறை அமைச்சர் ராஜு பேட்டி.



234 சட்டசபை தொகுதிகளிலும் ஆன்மிக அரசியலை மையப்படுத்தி. பிரசாரம் செய்கிறோம். அய்யம்பேட்டை கூட்டத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்கிறார்; அவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களுக்காக ஹிந்து மக்கள் கட்சி பிரசாரம் செய்ய கூடாதா?
- ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்


'அவர், குறிப்பிட்ட ஒரு மதத்தினரை, 'தாஜா' செய்து பேசுவார். ஆனால், நீங்கள் உண்மையை அப்பளம் போல போட்டு நொறுக்குவீர்களே; அதனால் தான் மறுப்போ என்னவோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.



ஒன்றரை ஆண்டாகியும், 'முரசொலி' பத்திரிகை அலுவலகத்தின் மூலப்பத்திரத்தை காட்டாத ஸ்டாலின், கிராமசபை கூட்டத்தின் வழியே, பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களை, 100 நாட்களில் தீர்ப்பேன் என்று சொல்வது, வேடிக்கையாக இருக்கிறது.
- அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன்


'சொல்வதைத் தான் செய்வர்; செய்வதைத் தான் சொல்வர் என்பது அவர்களின் வெற்று கோஷம் என்பதை, மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
14-பிப்-202115:33:09 IST Report Abuse
thulakol ஸ்டாலின் எல்லா உறுதி மொழி கூட்டத்தில் கொடுக்கிறார் எவனும் மூல பாத்திரம் காட்டுங்கள் என்று கேட்க மாட்டேன் என்கிறார்கள் . மூல பாத்திரம் காட்டினாள் ஒட்டு போடுவோம் ஸ்டாலினுக்கு
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-பிப்-202102:37:31 IST Report Abuse
sankaranarayanan முரசொலி' பத்திரிகை அலுவலகத்தின் மூலப்பத்திரம் காண்பி - காண்பி என்று ஆளுக்காளு கேட்கிறிர்களே? அடங்கி விட்ட விஷயத்தை திரும்ப திரும்ப சொன்னாலும் இருந்தால்தானே காட்டமுடியும் - யாருக்கு காட்ட வேண்டுமோ அவர்களிடம் காட்ட வேண்டியதை காட்டியாச்சு - கையில் கொடுக்க வேண்டியது கச்சிதமா கொடுத்தாச்சு இன்னும் என்ன எப்போ பார்த்தாலும் காண்பி காண்பி என்று கூக்குரல்?
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
13-பிப்-202121:58:57 IST Report Abuse
sethusubramaniam எனக்கு மூல பவுத்திரம் இல்லை என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி வைத்துள்ளேன். தேவைப்பட்டால் நீதி மன்றத்தில் சமர்ப்பிப்பேன். ஸ்டாலின்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X