பொது செய்தி

இந்தியா

இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து லோக்சபாவில் அவர் கூறியதாவது: பொருளாதாரத்தை சீரமைக்க பிரதமர் உறுதிபூண்டுள்ளார். அதனை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
budget, Nirmala sitharaman, Nirmala, Finance minister,  Finance minister Nirmala, india, economy,   பட்ஜெட்,  இந்தியா, பொருளாதாரம், வளர்ச்சி, நிர்மலா சீதாராமன், நிர்மலா, நிதியமைச்சர் நிர்மலா, நிதி அமைச்சர் நிர்மலா, நிதி அமைச்சர், பொருளாதார வளர்ச்சி

புதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து லோக்சபாவில் அவர் கூறியதாவது: பொருளாதாரத்தை சீரமைக்க பிரதமர் உறுதிபூண்டுள்ளார். அதனை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. பொருளாதாரத்தை மறுசீரமைப்பதே எங்களின் முதன்மை நோக்கம். இந்தியா மீது பா.ஜ., கொண்டுள்ள நம்பிக்கையை இந்த பட்ஜெட் எடுத்து காட்டுகிறது.வரி கட்டுவோர்களுக்கு பட்ஜெட்டில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை அரசு எடுப்பதை, பெருந்தொற்று போன்ற சவாலான சூழ்நிலைகள் தடுத்து விடாது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு சீர்திருத்தங்கள் உதவும். கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும்.இந்தியா தன்னிறைவு பெறுவதற்கான பாதையை பட்ஜெட் அமைத்து கொடுத்துள்ளது.


latest tamil news



விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.6 ஆயிரம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 80 மில்லியன் பேருக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி சென்றடைந்துள்ளது. எந்த ஒரு பெரு முதலாளிகளுக்காகவும மத்திய அரசு பணியாற்றவில்லை. மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள ஏழை மக்களுக்காகவே மத்திய அரசு பணியாற்றுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
14-பிப்-202107:21:36 IST Report Abuse
அறவோன் இரண்டாண்டுகளுக்கு முன்னர் ரஃபேல் (factory visit), பிரான்சிற்கு சென்று தன்னை வளப்படுத்திக்கொண்டது தான் இந்த நபரின் சாதனை ‼️
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
14-பிப்-202107:04:36 IST Report Abuse
அறவோன் "ஆத்ம நிர்பார்" திட்டத்தில் ரூ 5 லட்சம் கோடிகள் ஒதுக்கி, வாகனங்களின் எரிபொருள் டேங்க்கை ஒரு லிட்டர் அளவுக்கு சிறிதாக்கி, "100 ரூபாயில் டேங்க்கை நிரப்பிவிடலாம்" - "இது நேருவால் செய்யமுடியாத சாதனை" என்று அறிவிப்பான்கள்👎👎👎😖😖😖
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-பிப்-202107:01:36 IST Report Abuse
Mani . V எந்த ரூட்டு வழியே செல்கிறது மேடம்? நேஷனல் ஹை வே அல்லது மாநில நெடுஞ்சாலை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X