பொது செய்தி

இந்தியா

சென்னை டெஸ்ட்: ரோகித் சர்மா 'சூப்பர்' சதம்

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் ரோகித் சர்மா சதம் அடித்தார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்திய அணி 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது.'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு
ரோகித் சர்மா, சதம், Cricket, Chennai, சென்னை, கிரிக்கெட்,

சென்னை: சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் ரோகித் சர்மா சதம் அடித்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்திய அணி 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது.

'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார்.
வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் நதீம், பும்ராவுக்குப் பதில் இந்திய அணியில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அறிமுக வீரராக அக்சர் படேல் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், டாம் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், பட்லருக்கு பதில் மொயீன் அலி, ஸ்டோன், போக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப் பட்டுள்ளனர்.


சுப்மன் ஏமாற்றம்



இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஸ்டோன் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் சுப்மன் கில் 'டக்' அவுட்டானார். ரோகித்துடன் இணைந்தார் புஜாரா. இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோர் சீராக உயர்ந்தது. ஸ்டோக்ஸ் வீசிய 12வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், லீச் பந்துகளையும் விட்டு வைக்கவில்லை. இவர் 47 வது பந்தில் தனது 12வது அரைசதம் அடித்தார்.


latest tamil news



இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த போது, லீச் சுழலில் புஜாரா (21) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி, மொயீன் அலி சுழலில் ரன் கணக்கை துவக்காமல் போல்டாக, சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோகித் சர்மா, மொயீன் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார்.

மொயீன் பந்தில் இரண்டு ரன் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 7வது சதம் அடித்தார் ரோகித் சர்மா. இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
13-பிப்-202116:20:56 IST Report Abuse
vnatarajan யார்கர் நட்டு இல்லாதது சென்னை ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம்.
Rate this:
Cancel
I LOVE MY INDIA - CHENNAI,குவைத்
13-பிப்-202115:51:29 IST Report Abuse
I LOVE MY INDIA எத்தனை கோடி MAN HOURS வேஸ்ட் ....................பொழுது போக்கு வேணும் 2020 போல ................டெஸ்ட் அல்ல ..........
Rate this:
Cancel
ABDUL MALIK - Manqaf,குவைத்
13-பிப்-202114:23:06 IST Report Abuse
ABDUL MALIK நடராஜன் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம் ...... வெல்லட்டும் இந்தியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X