சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கார்பனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்!

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பொதுநல நோக்கில், புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்காக உருவானது தான் எக்ஸ் பிரைஸ் என்ற பரிசு. இதில் பல தொழிலதிபர்கள் பங்களித்து புதிய எக்ஸ் பிரைஸ் போட்டிகளை அறிவிப்பர். அந்த வகையில், அண்மையில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க் ஒரு புதிய போட்டியை அறிவித்துள்ளார். காற்று, கடல் என, இரண்டறக் கலந்துவிட்ட மாசுப் பொருளான கார்பனை, தனியே
 கார்பனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்!

பொதுநல நோக்கில், புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்காக உருவானது தான் எக்ஸ் பிரைஸ் என்ற பரிசு. இதில் பல தொழிலதிபர்கள் பங்களித்து புதிய எக்ஸ் பிரைஸ் போட்டிகளை அறிவிப்பர். அந்த வகையில், அண்மையில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க் ஒரு புதிய போட்டியை அறிவித்துள்ளார்.

காற்று, கடல் என, இரண்டறக் கலந்துவிட்ட மாசுப் பொருளான கார்பனை, தனியே பிரித்தெடுக்கும் சிறந்த தொழில்நுட்பத்திற்கு 728 கோடி ரூபாயை, எக்ஸ் பரிசாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதுவரை அறிவிக்கப்பட்ட எஸ் பிரைஸ் தொகையிலேயே இதுதான் மிகப் பெரிய தொகை. எனவே, இதற்கான போட்டிக்காலம் நான்கு ஆண்டுகள். அதுமட்டுமல்ல, இவ்வளவு பெரிய தொகையை எலான் மஸ்க், தனது நன்கொடையாக தருவதாக அறிவித்து உள்ளார்.

உலகின் எந்த பகுதியிலிருந்தும், எவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். கெடு தேதிக்குள், சுற்றுச்சூழலில் கலந்துள்ள கார்பனை, ஒரு நாளைக்கு குறைந்தது, 1 டன் என்ற அளவில் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை போட்டியாளர், வெற்றிகரமாக செயல் முறைப்படுத்தியிருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு, 1 டன் கார்பனை பிரித்தெடுப்பதோடு, அதை பத்திரமாக, 100 ஆண்டுகளுக்கு தேக்கி வைக்கும் முறையையும் கண்டுபிடிப்பாளர் மற்றும் அவரது அணி உருவாக்க வேண்டும் என, எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prince Paul - Thoothukudi,ஜெர்மனி
16-பிப்-202116:45:31 IST Report Abuse
Prince Paul கார்பனை குறைக்க வாங்குவீர் டெஸ்லா கார் டெஸ்லா கார் டெஸ்லா கார்
Rate this:
Cancel
Mohanraj - Chennai,இந்தியா
16-பிப்-202115:57:02 IST Report Abuse
Mohanraj கார்பனை நுறு ஆண்டுகள் சேகரித்து வைப்பது ஏன்பது மிக பெரிய ஆபத்து. மரங்களும், காடுகளும் வளர்ப்பது மட்டுமே சிறந்த வழி.
Rate this:
Cancel
Mohanraj - Chennai,இந்தியா
16-பிப்-202115:50:47 IST Report Abuse
Mohanraj மிக அதிக அளவில் மரங்களை நட வேண்டும். புதிய காடுகளை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகள் அரசு விதிக்கும் கட்டுப்பாட்டை மதிக்க வேண்டும். மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அதீத அதிகாரங்களை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X