பொது செய்தி

இந்தியா

பா.ஜ., ஒரு கோழை: டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (120)
Share
Advertisement
புதுடில்லி : எல்லை பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆளும் மத்திய பா.ஜ. அரசை விமர்சித்து, கோழை பா.ஜ., என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாய சங்கத்தினர் தொடர்ந்து 75 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய 11 சுற்று
CowardBJP, GoBackModi, GoBackCowardModi, BJP, PMModi, Congress, Rahul, Farmersprotest,

புதுடில்லி : எல்லை பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆளும் மத்திய பா.ஜ. அரசை விமர்சித்து, கோழை பா.ஜ., என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாய சங்கத்தினர் தொடர்ந்து 75 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் போராட்டம் சமூகவலைதளமான டுவிட்டரிலும் தினம் ஒரு ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்தவகையில் இன்று(பிப்., 13) #CowardBJP என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகிறது.

இந்த ஹேஷ்டாக்கில் பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி டுவிட்டர் தளவாசிகள் ஆளும் மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அண்டை நாடான சீனா எல்லையில் ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் அவர்களை தடுக்காமல் இங்குள்ள விவசாயிகள் போராட்டத்தை தடுக்க சாலைகளில் தடுப்புவேலிகள், தற்காலிக தடுப்பு சுவர்கள் எழுப்பியதை சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றனர்.


latest tamil news
விவசாயிகளுடன் பேச தயார் என பிரதமர் மோடி கூறினார் ஆனால் இதுவரை பேச முன்வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்கின்றனர். மேலும் எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டதை நேற்று காங்கிரஸின் ராகுல் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார். இதை சுட்டிக்காட்டியும் பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். சீனாவிற்கு பயந்து எல்லையில் படைகளை வாபஸ் பெற்றது. விவசாயிகளை நேரடியாக எதிர்க்க முடியாமல் கோழைத்தனமாக செயல்படுகிறது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டுவிட்டரில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் விஷமங்களை பரப்புகின்றனர். அவர்களின் டுவிட்டர் கணக்கை முடக்கியதை கூட சுட்டிக்காட்டி கோழை பா.ஜ. அரசு என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இதோடு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தாமல் பணக்கார கார்பரேட் முதலாளிகளை பகைத்து கொள்ள கூடாது என அவர்களுக்கு பயந்து எந்த நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ள மறுக்கிறது என சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்று பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் முடிவு உள்ளிட்ட பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி பா.ஜ., அரசை விமர்சித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #CowardBJP என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

இதன் உடன் நாளை(பிப்., 14) தமிழக வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம் போல் #GoBackModi என்ற ஹேஷ்டாக்கும் அதன் உடன் #GoBackCowardModi என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆகின.

Advertisement
வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-பிப்-202114:19:33 IST Report Abuse
S.Baliah Seer மக்களை ஏமாற்றவே.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-பிப்-202114:14:20 IST Report Abuse
S.Baliah Seer இந்த டிவிட்டரில் பதிவு செய்வோருக்கு கோழைக்கும், கிரிமினல்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.பா.ஜ.க உலகின் நம்பர் ஒன் கிரிமினல் கட்சி.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
14-பிப்-202111:12:08 IST Report Abuse
Rasheel அட அறிவாளி சீனாவுடன் சண்டையை ஆரம்பித்து கொரோன சமயத்தில் பல ஆயிரம் கோடி இழப்பை, மற்றும் உயிர் இழப்பை சந்திக்கவா? அல்லது அவர்களின் ஆப்ஸ் தடை செய்வதன் மூலம் அவர்களுக்கு 45000 கோடி இழப்பை ஏற்படுத்துவது புத்திசாலித்தனமா?
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
14-பிப்-202114:02:26 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுவயித்து பசிக்கு இலவச அரிசி தாகத்துக்கு டாஸ்மாக் என்று வாழ்பவனுக்கு மூளை அந்த அளவுக்குத்தான் வெல்ஸை செய்யும் ரஷீலூ...
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-பிப்-202114:02:26 IST Report Abuse
pradeesh parthasarathyஎவ்வளவு நாள் தான் தயிர் சாதம் ... போரடிக்காத என்ன ......
Rate this:
Manian - Chennai,ஈரான்
18-பிப்-202112:48:57 IST Report Abuse
Manianஎந்த பால் தயிருங்க?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X