சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 13, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்அழியும் மீன்'சாபிஷ்' என்பது திருக்கை மீன் வகையை சேர்ந்தது. இவ்வகை மீன்களை அதிகளவில் பிடிப்பதால், அவை அழியும் நிலையில் உள்ளன என கடல்சார் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் 99 கடலோர நாடுகளில் தற்போது 46 நாடுகளில் 'சாபிஷ்' மீன்கள் அழிவை சந்தித்துள்ளன. இது நீண்ட தட்டையான மூக்கை கொண்டது. இதன் இரு ஓரங்களில் ரம்பம் போன்ற பற்கள் உள்ளன. இவை 23 - 25 அடி நீளம் வரை

அறிவியல் ஆயிரம்
அழியும் மீன்

'சாபிஷ்' என்பது திருக்கை மீன் வகையை சேர்ந்தது. இவ்வகை மீன்களை அதிகளவில் பிடிப்பதால், அவை அழியும் நிலையில் உள்ளன என கடல்சார் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் 99 கடலோர நாடுகளில் தற்போது 46 நாடுகளில் 'சாபிஷ்' மீன்கள் அழிவை சந்தித்துள்ளன. இது நீண்ட தட்டையான மூக்கை கொண்டது. இதன் இரு ஓரங்களில் ரம்பம் போன்ற பற்கள் உள்ளன. இவை 23 - 25 அடி நீளம் வரை வளர்கின்றன. இவை சில வகை மீன்கள், கடல் வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்கிறது. இதன் எடை 500 முதல் 600 கிலோ இருக்கும்.

தகவல் சுரங்கம்
முதல் பெண் ஐ.ஏ.எஸ்.,

இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என அழைக்கப்படுபவர் அன்னா ராஜம் மல்கோத்ரா. 1927 ஜூலை 17ல் கேரளாவில் பிறந்தார். இளநிலை படிப்பை கோழிக்கோடு மலபார் கிறிஸ்துவ கல்லுாரியிலும், எம்.ஏ.., ஆங்கில படிப்பை சென்னை பல்கலையிலும் முடித்தார். 1950ல் நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றார். முதல் பணியாக தமிழகத்தில் சப் கலெக்டராக பணியாற்றினார். 1989ல் பத்ம பூஷண் விருது பெற்றார். 2018ல் மறைந்தார். இவரது கணவர் மல்கோத்ரா, ரிசர்வ் வங்கியின் கவர்னராக 1985 - 1990 வரை பதவி வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X