'டூம்ஸ்டே மேன்' ஆக, மாறிவிட்டார் ராகுல்

Updated : பிப் 15, 2021 | Added : பிப் 13, 2021 | கருத்துகள் (16+ 48)
Share
Advertisement
புதுடில்லி:''அரசியலமைப்புகளில் உயர்ந்த தலைமை வகிப்போர் பற்றி அவதுாறாகவும், பல்வேறு விஷயங்களில் போலியான கட்டுக்கதைகளையும் கூறி, தேசத்தின் வளர்ச்சி பற்றி எதிர்மறையாகவே பேசி, நாட்டின் வில்லனாகவே, ராகுல் மாறிவிட்டார்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட, 2021 - 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான

புதுடில்லி:''அரசியலமைப்புகளில் உயர்ந்த தலைமை வகிப்போர் பற்றி அவதுாறாகவும், பல்வேறு விஷயங்களில் போலியான கட்டுக்கதைகளையும் கூறி, தேசத்தின் வளர்ச்சி பற்றி எதிர்மறையாகவே பேசி, நாட்டின் வில்லனாகவே, ராகுல் மாறிவிட்டார்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.latest tamil newsபார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட, 2021 - 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம், லோக்சபாவில் நடந்தது. விவாதத்துக்கு பதில் அளித்து, நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் பேசியதாவது:


அச்சம்பட்ஜெட் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசும் போது, 10 முக்கிய விஷயங்களை எதிர்பார்த்தேன்; ஆனால் அவர், நாட்டை இழிவுபடுத்தும் விதமாகவே பேசி வருகிறார். போலியான கட்டுக்கதைகளை உருவாக்கும் ராகுலுக்கு, அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கும் பதிலைக் கேட்கும் பொறுமையும் இல்லை.

அரசியலமைப்புகளில் உயர்ந்த தலைமை வகிப்போர் பற்றி அவதுாறாகவும், பல்வேறு விஷயங்களில் போலியான கட்டுக்கதைகளையும் கூறி, தேசத்தின் வளர்ச்சி பற்றியும், எதிர்மறையாகவே, ராகுல் தொடர்ந்து பேசி வருகிறார்.அழிவு காலத்தைப் பற்றியே, எப்போதும் சிந்திக்கும் ராகுல், நாட்டின் வில்லனாகவே மாறிவிட்டதாக தெரிகிறது. அவநம்பிக்கை மனிதராக, ராகுல் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது.

கெட்ட காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் மனிதர் தலைமையில் தான், எதிர்க்கட்சிகளும் நடக்கின்றன. கொரோனா காலத்தில்,ராகுல் என்ன பேசினார் என்பது, எனக்கு நினைவிருக்கிறது. அதனால், அவர் பேசியதை மீண்டும் கூறி, சபையின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பட்ஜெட் விவாதத்தில் பேசிய ராகுல், பட்ஜெட்டைப் பற்றி எதுவுமே பேசவில்லை. வேளாண் சட்டங்கள் பற்றி பேசினார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டசபை தேர்தலின் போது, விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து, தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறி இருந்தது. ஆனால் அதுகுறித்து, தன் பேச்சில், ராகுல் எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில், விவசாயிகள் பிரச்னை பற்றி ராகுல் பேசவில்லை. வயல்களில், வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிப் பேசவில்லை.

விவசாயிகளுக்கு எதிராக, வேளாண் சட்டத்தில் எந்த அம்சங்கள் உள்ளன என்பது குறித்து, ராகுல் ஏதும் பேசவில்லை. வேளாண் சட்டங்கள் பற்றி, பிரதமர் அளித்த விளக்கத்துக்கு பதில் அளிக்கும் வகையிலும், ராகுல் பேசவில்லை. இழிவுகாங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த நேரத்தில், அவசர சட்ட நகலை கிழித்து எறிந்தவர் தான் ராகுல். நாட்டை பிளவு படுத்தும் குழுக்களுடன், காங்கிரஸ் கட்சி இணைந்து, பொய்யான கருத்துக்களையும், போலியான கட்டுக்கதைகளையும் கூறி, நாட்டை இழிவு படுத்துகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


'முதலாளிகளுக்காக பணியாற்றவில்லை'பட்ஜெட் பற்றி, லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:பொருளாதாரத்தை சீரமைக்க பிரதமர் உறுதி எடுத்துள்ளார். அதை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ளன. பொருளாதாரத்தை மறுசீரமைப்பதே, எங்களின் முதன்மை நோக்கம். நாட்டின் மீது பா.ஜ., வைத்துள்ள நம்பிக்கையை, இந்த பட்ஜெட் எடுத்து காட்டுகிறது. வரி செலுத்துவோருக்கு, பட்ஜெட்டில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை அரசு எடுப்பதை, பெருந் தொற்று போன்ற சவாலான சூழ்நிலைகள் தடுத்து விடாது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு, சீர்திருத்தங்கள் உதவும். கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில், இந்தியாவை கொண்டு செல்வதற்கு பட்ஜெட் உதவும்.நாடு தன்னிறைவு பெறுவதற்கான பாதையை, இந்த பட்ஜெட் அமைத்துக் கொடுத்துள்ளது.

விவசாயிகளின் வங்கிக்கணக்கில், 6,000 ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 'பசல் பீமா யோஜனா' திட்டத்தின் கீழ், ஒன்பது கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். எட்டு கோடி பேருக்கு இலவச, 'காஸ்' சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பெரு முதலாளிகளுக்காகவும், மத்திய அரசு பணியாற்றவில்லை. மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள ஏழை மக்களுக்காகவே, மத்திய அரசு பணியாற்றுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil news
'டூம்ஸ்டே மேன்' கதாபாத்திரம்லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, ''இந்தியாவின், 'டூம்ஸ்டே மேன்' ஆக, ராகுல் மாறிவிட்டார்,'' எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில், 'மார்வெல் காமிக்ஸ்' வெளியிட்ட புத்தகங்களில் வரும் கற்பனை கதாபாத்திரம் தான், டூம்ஸ்டே மேன். இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர், எழுத்தாளர் ஸ்டான் லீ. வடிவம் கொடுத்தவர் ஓவியர் ஜான் புசீமா. இந்த கதாபாத்திரம், முதலில், 'சில்வர் சபர்' என்ற நாவலில் தான் இடம் பெற்றது.

மிகக் கொடூர வில்லனாக, 'டூம்ஸ்டே மேன்' கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது. அதன் பின், பல நாவல்கள், திரைப்படங்கள், நாடகங்களில், இந்த கதாபாத்திரம் இடம் பெற்றது. அழிவு சக்திக்கான அடையாளமாக, டூம்ஸ்டே மேன் கதாபாத்திரம், அமெரிக்கர்களால் கருதப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (16+ 48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
14-பிப்-202120:24:06 IST Report Abuse
siriyaar என்ன இருந்தாலும் நிதி அமைச்சர் ஒரு பெண் என்பதை நிருபிக்கிறார் அனுதாபத்தில் ஒரு காமெடியனை போய் வில்லனுடன் ஒப்பிடுவது அனுதாப மனப்பான்மையை காட்டுகிறது. இவர் இந்தியாவின் Mr.BEAN.
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
14-பிப்-202116:16:25 IST Report Abuse
SENTHIL எல்லாம் சரி மேடம். கோரோனோ கால கட்டத்தில், பணம் இல்லாமை மற்றும் சரியான தொழில் இல்லாமை போன்ற பல காரணங்களால, கொடுத்த காலவறைக்குள் தாக்கல் செய்ய முடியாத வரி செலுத்துவோரை கெஞ்சி கேட்டும் காலஅவகாசம் தராமல், வரிக்கு வட்டி, மிக அதிகமான கால தாமத கட்டனம் போன்ற கொடுமைகளை சுமத்துவது எந்த வித நியாயம் மேடம்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
14-பிப்-202114:33:35 IST Report Abuse
Rajas /////வயல்களில், வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிப் பேசவில்லை.//// என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X