பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : பொறுமைக்கும் எல்லை உண்டு!

Updated : பிப் 14, 2021 | Added : பிப் 14, 2021 | கருத்துகள் (87)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மக்களுக்கு தினமும் பொருளாதார அழுத்தம் ஏற்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் எனும், மத்திய அரசின் முடிவால், தொடர்ந்து விலை ஏற்றம் மட்டுமே

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மக்களுக்கு தினமும் பொருளாதார அழுத்தம் ஏற்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் எனும், மத்திய அரசின் முடிவால், தொடர்ந்து விலை ஏற்றம் மட்டுமே இருக்கிறது.latest tamil newsசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. அது ஏன் என்ற கேள்விக்கு மட்டும், யாரும் விடை கூறுவதே இல்லை. கொள்ளு என்றால் வாயை திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளும் குதிரை போல, இச்செயல் உள்ளது.கச்சா எண்ணெய் விலை, பிற நாடுகளில் பெட்ரோல் விலை போன்ற அனைத்தும், இன்று சாமான்ய மக்களுக்கும் தெரிகிறது. எனவே, மக்களை ஏமாற்ற முடியாது என்பதால் தான், மத்திய அரசு, எரிபொருள் விலை உயர்வு குறித்து, வாய் திறக்க மறுக்கிறது.


latest tamil newsகொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து தரப்பு மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் அதிக வரி விதிப்பால் தான், இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்பது, அனைவருக்கும் தெரியும்.இதனால் நாட்டில், மவுனப் புரட்சி உருவாகி வருகிறது என்பதை, அரசு உணர வேண்டும்.நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக, எரிபொருள் உள்ளது. இருசக்கர வாகனம் முதல், தொழிற்சாலைகள் வரை, எரிபொருளின் தேவை அவசியமானதாக இருக்கிறது.

இதற்கு மேலும், நம் மக்களால் இந்த விலை ஏற்றத்தை தாங்க முடியாது. தனியார் நிறுவனங்களும், அரசும் கொள்ளை லாபம் அடைவதற்காக, மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பது போல, விலை உயர்வு உள்ளது. இது, காய்கறி போல இயற்கையால் ஏற்பட்ட விலை உயர்வு அல்ல; திட்டமிட்டு உயர்த்தப்படுகிறது.இந்த விஷயத்தில், நாட்டு மக்களின் கோபம் எல்லை கடக்கும் முன், அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-202123:24:35 IST Report Abuse
ஆரூர் ரங் சரி. பெட்ரோல் வரியை கொறச்சாதான் விலை குறையும். ஆனா அந்த வரி வருமான இழப்பை எதைவைத்து சரி 🤔செய்வது ? எந்த வரி போட்டாலும் அது வண்டி வாங்கக்கூட வழியில்லாத ஏழை தலையில்தான் முடியும். வேண்டாம்னு பணக்காரர்களுக்கு வரி போட்டா அவர் தன் உற்பத்திப் பொருள் விலைகளைக்கூட்டி அதே ஏழை தலையில்தான் கட்டுவார். எண்ணெய் கம்பெனி தலையில் கட்டினால் போதுமான லாபமில்லாமல் மூடி விடுவர். ஆனானபட்ட முகேஷே ரிலையன்ஸ் பெட்ரோ பங்குகளை சவூதியிடம் விற்கும் நிலைமை. 😇கொஞ்சம் சிந்தியுங்க
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
14-பிப்-202119:28:51 IST Report Abuse
r.sundaram பிஜேபி சொன்ன காரணங்கள் எல்லாம் சரியே. தற்போது வெளிநாட்டு கடன்கள் திருப்பி அளிக்கப்பட்டு விட்டன. இந்திய மத்திய வங்கியில் நமது வெளிநாட்டு கடன்களை விட டாலர் கூடுதலாக இருக்கிறது. ஆகையால் இனிமேல் உலக அளவில் கட்சா எண்ணையின் மதிப்புக்கு தகுந்தபடி உள்நாட்டு பெட்ரோல் விலையை கூட்டி குறைத்து விலை நிர்ணயம் செய்யலாம். செய்தால் நடுத்தர மக்களின் சிரமம் குறையும். மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
14-பிப்-202119:28:35 IST Report Abuse
அறவோன் , வாகனங்களின் எரிபொருள் டேங்க்கை ஒரு லிட்டர் அளவுக்கு சிறிதாக்கி, "100 ரூபாயில் டேங்க்கை நிரப்பிவிடலாம்" - "இது நேருவால் செய்யமுடியாத சாதனை" என்று அறிவிப்பான்கள்👎👎👎😖😖😖
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-பிப்-202121:10:37 IST Report Abuse
Visu Iyerஎதற்காக பெட்ரோல் விலை அதிகமாயிருக்கு.... எல்லோரும் பேட்டரி வண்டிக்கு மாறனும். இப்போ ஒர்க் பிரம் ஹோம் அதனாலே வண்டியை எடுத்துக்கிட்டு சுத்த கூடாது கொரநா வந்துடும் (அப்படி ஒன்னு இருந்தால்) வண்டியை எதற்கு எடுத்தாலும் எடுத்துக்கிட்டு சுத்தினா சுற்று புரா சூழலுக்கு கெடுதல். அதனால் கொரநா போல இன்னொரு பிராநா வந்துடும்.. அதனால் தானே பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்காங்க... பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ஐநூறு ரூஒபைக்கு விற்க வேண்டும்.. மக்கள் எல்லோரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். போதுமா... அவர்கள் மட்டும் காரில் போவார்கள். மக்கள் வரி பணத்தில் பெட்ரோல் போட்டுக்கிட்டு .... ஏன் என்று கேட்க கூடாது.. விரலை காட்டுங்க.. மை தடவனும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X