பொது செய்தி

தமிழ்நாடு

'காருண்யா'வின் சட்டவிரோத கட்டுமானங்கள்; தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்

Updated : பிப் 14, 2021 | Added : பிப் 14, 2021 | கருத்துகள் (87)
Share
Advertisement
கோவை: கோவை அருகே காருண்யா நகரில் காளான் போல் பெருகிவரும் தேவாலய கட்டுமானங்களுக்கு 10 ஆண்டுகளில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.கோவை அருகே காருண்யா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல பிரார்த்தனை அரங்குகள் தேவாலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை அந்தந்த ஊராட்சிகளின் ஒப்புதல் இல்லாமலேயே காளான் போல் பெருகியுள்ளது தகவல்
காருண்யா, சட்டவிரோத கட்டுமானங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம்,

கோவை: கோவை அருகே காருண்யா நகரில் காளான் போல் பெருகிவரும் தேவாலய கட்டுமானங்களுக்கு 10 ஆண்டுகளில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

கோவை அருகே காருண்யா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல பிரார்த்தனை அரங்குகள் தேவாலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை அந்தந்த ஊராட்சிகளின் ஒப்புதல் இல்லாமலேயே காளான் போல் பெருகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமை மனுவை தாக்கல் செய்த வக்கீல் ரங்கராஜு கூறியதாவது: கோவை மாவட்டம் மத்வராயபுரம், பூலுவபட்டி, இக்கரை, போளுவாம்பட்டி, ஆலாந்துறை ஊராட்சிகள் மற்றும் அவற்றை சுற்றிலும் 10 ஆண்டுகளில் பல புதிய தேவாலயங்கள் பிரார்த்தனை மண்டபங்கள் முளைத்துள்ளன.


latest tamil news



இந்த நான்கு ஊராட்சிகளில் உள்ள 18 தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனை மண்டபங்கள் உள்ளாட்சி நிர்வாக ஒப்புதலுடன் கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மனு அளிக்கப்பட்டது. மத்வராயபுரம் மற்றும் பூலுவபட்டி ஊராட்சிகளின் தகவல் அலுவலர் பதிலளிக்கையில் 'தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனை கூடங்களுக்கு 10 ஆண்டுகளில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை' என தெரிவித்துள்ளார். மத்வராயபுரம் பகுதியில் பெந்தெகொஸ்தே மிஷன், சி.எஸ்.ஐ. கிறைஸ்ட் சர்ச், பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மண்டபம் உள்ளிட்ட பல அனுமதி பெறவில்லை.


latest tamil news





எந்த பதிலும் வரவில்லை !


பழங்குடி மக்களைக் கவரும் வண்ணம் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்த வழிபாட்டுத் தலங்களில் இறைச்சி விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. பின் அவர்கள் படிப்படியாக கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்படுகின்றனர். இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் குறித்து இதே போன்ற தகவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news




காருண்யா மறுப்பு


காருண்யா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில் ''எந்தவொரு சட்டவிரோத கட்டுமானத்தையும் காருண்யா கட்டவில்லை. காருண்யா என்பது ஒரு தொண்டு நிறுவனம்; கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கு சேவை செய்வதற்காக மட்டுமே'' என்றார்.


கலெக்டர் விளக்கம்


கலெக்டர் ராஜாமணியிடம் கேட்டபோது 'குடியிருப்பு இடங்களுக்கு நடுவே புதிதாகக் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. கடந்த காலங்களில் இதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. ஆர்.டி.ஐ. தகவல் குறித்து விசாரிக்கிறேன் என்றார்.


latest tamil news



'கண்டுகொள்ளாத போலீசார்'


ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: மத மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு தான், இந்த தேவாலயங்களை காருண்யா நிர்மாணித்து வருகிறது. நாங்கள் புகார் பதிவு செய்ய முனைந்தால், காருண்யாவுடன் கை கோர்க்கும் போலீசார் புகார்களை பதிவு செய்வதில்லை. கொரோனா காலத்தின்போதும் சமூகப் பிரார்த்தனை அரங்குகளில், மத மாற்ற முயற்சி நடந்தது. இது குறித்து புகார் தெரிவித்தபோது, போலீசார், 'கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல் தொடர்பான வழக்குகளை மட்டுமே பதிவு செய்தனர். மதமாற்ற குற்றச்சாட்டை கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-பிப்-202121:13:33 IST Report Abuse
Bhaskaran ராஜாமணியின் விலை எத்தனைகோடியோ
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-பிப்-202118:33:21 IST Report Abuse
r.sundaram மதம் மாறிய பிறகு அடிமைத்தனம் இல்லை என்றால், ஏன் இவர்கள் தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
15-பிப்-202112:44:13 IST Report Abuse
konanki கடந்த சில வருடங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 10,000 புதிய ஜெப கூடங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X