அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அறிவிக்கும் முன்பே 'விளையாடுது' பணம்: இனிதான், மெயின் பிக்சர்'

Updated : பிப் 14, 2021 | Added : பிப் 14, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டசபை தொகுதிகளை கைப்பற்ற, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, பணம் 'விளையாட' துவங்கிவிட்டது. ஓட்டுக்காக, பணம் வாரியிறைக்கப்பட உள்ளது.'எங்கள் ஓட்டுகள், விற்பனைக்கு அல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல் பிரமுகரிடம் பொட்டில் அடித்தாற்போல், சொல்லும் 'தில்', வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும்.வேளாண் மற்றும் தொழில் சார் பொருளாதாரம் கொண்ட,
தேர்தல், பணம், திருப்பூர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டசபை தொகுதிகளை கைப்பற்ற, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, பணம் 'விளையாட' துவங்கிவிட்டது. ஓட்டுக்காக, பணம் வாரியிறைக்கப்பட உள்ளது.'எங்கள் ஓட்டுகள், விற்பனைக்கு அல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல் பிரமுகரிடம் பொட்டில் அடித்தாற்போல், சொல்லும் 'தில்', வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும்.

வேளாண் மற்றும் தொழில் சார் பொருளாதாரம் கொண்ட, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளை வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நோக்கில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகள் களத்தில் குதித்துள்ளன.முதல்வர் பழனிசாமி, தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆகியோர், முதற்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். காங்., முன்னாள் தலைவர் ராகுல், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் பிரசாரத்தை முடித்துள்ளனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.தேர்தல் பிரசார கூட்டங்களில், மக்கள் கூட்டம் குவிகிறது. இதன் பின்னணி காரணம், பண பட்டுவாடா என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு கூட்டத்தில் பங்கேற்க, குறைந்தபட்சம் ஒருவருக்கு 200 முதல் 500 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.


latest tamil newsகடந்த பார்லிமென்ட் தேர்தலின்போது, திருப்பூர் தொகுதியில், பணம் 'விளையாடியது'. தற்போது, பிரசார கூட்டங்களில் பங்கேற்கவே, பணத்தை வாரியிறைக்கும் நிலையில், சட்டசபை தேர்தலில், ஓட்டளிக்க, வாக்காளர்களுக்கு, பணத்தை அள்ளித்தர, கட்சிகள், தற்போதே தயாராகி வருகின்றன.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரசியல் பிரமுகர்கள், அதிகாரத்துக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டனர். தேர்தல் அறிவிக்கும் முன்பே, விதிமுறைகள் மீறப்பட்டு, பணம் வாரியிறைக்கப்படுகிறது. இதற்கு, வாக்காளர்கள் ஒருபோதும் மயங்கிவிடக்கூடாது.பணம், மது, பிரியாணிக்காக, ஓட்டுகளை அடகுவைக்கும் நிலை தொடரக் கூடாது. குறிப்பாக, ஒரு ஓட்டுக்கு அல்லது ஒரு குடும்பத்துக்கு என, ஆயிரக்கணக்கில், பணம் பட்டுவாடா செய்ய, அரசியல் கட்சியினர், தயாராக உள்ளனர்.

தேர்தல் பிரசார காலம், தேர்தலுக்கு முந்தைய நாட்களில், எக்காரணம் கொண்டும், பணத்துக்காக, தங்கள் துணிச்சலைக் கைவிட்டுவிடக் கூடாது.'எங்கள் ஓட்டுகள், விற்பனைக்கு அல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல் பிரமுகரிடம் பொட்டில் அடித்தாற்போல் புரிய வைக்க வேண்டும். சுய நலன் பாராது, மக்களுக்காக உழைக்கும் வேட்பாளர் யாரோ, அவருக்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


5 வருஷத்த விற்க போறீங்களா?


திருப்பூர் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் தொழில்துறை மேம்பட, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியம். பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதும் முக்கியம். அரசியல் பிரமுகர்கள் ஓட்டு கேட்க வரும்போது, 'எங்க பகுதி பிரச்னைகளை தீர்த்து வையுங்க' என்று வாக்காளர்கள் கேட்பது வழக்கம். இது தற்போது படிப்படியாக குறைந்து, 'எவ்ளோ பணம் தருவாங்க' என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'அவங்க அதிகமா பணம் கொடுத்திருக்காங்க... நீங்க கம்மியா கொடுக்கறீங்க...' என்ற ஒப்பீடும் பல இடங்களில், நடக்கிறது.ஒரு ஓட்டை விற்பது, நமக்கான ஐந்து ஆண்டுகளை விற்பதற்கு சமம் என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
15-பிப்-202100:09:40 IST Report Abuse
தல புராணம் இம்புட்டு பணம் விளையாடுதுன்னு உனக்கே தெரியும் போது, லட்சம் போலீஸ், லட்சம் துறை அதிகாரிகளை வெச்சிக்கிட்டு நாடகம் ஆடும் இவனுங்களுக்கு தெரியாதா?? ஏன் ஒண்ணும் செய்யலை??
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-பிப்-202122:34:51 IST Report Abuse
Visu Iyer அரசியல் கட்சிகள் தாரளாமாக மக்களுக்கு பணம் தரலாம் ஆனால் இந்த பணத்திற்கு எழுபது சதவீதம் வரி கட்ட வேண்டும் என்று சொன்னால் அரசுக்கு வருமானம் வரும் தானே... அது சரி, இது தெரிந்தால், ஏன் நிதி அமைச்சகம் தள்ளாடுது...டாஸ்மாக் பின்னாடி ஓடுது.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-பிப்-202122:33:31 IST Report Abuse
Visu Iyer அரசியல் கட்சிகள் தரும் பணத்தை வருமான வரி கணக்கில் காட்டி, அதற்கு வரி செலுத்த வேண்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X