பொது செய்தி

தமிழ்நாடு

தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கை ஏற்பு: பிரதமர்

Updated : பிப் 15, 2021 | Added : பிப் 14, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை: 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தேவேந்திரகுல வேளாளர் சகோதர சகோதரிகள், கோரிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்கிறது. அவர்கள் இனி,
modi, Pmmodi, Pmnarendra modi, narendra modi,

சென்னை: 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தேவேந்திரகுல வேளாளர் சகோதர சகோதரிகள், கோரிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்கிறது. அவர்கள் இனி, பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுவார்கள். 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்கிறது
தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கையை நீண்ட காலமாக தமிழக அரசு ஆதரித்து வந்துள்ளது. அந்த குல மக்களுடனான எனது சந்திப்பு மறக்க முடியாதது. அப்போது அவர்களின் வருத்தங்களை தெரிவித்தார்கள். பல தசாப்தங்களாக அது நிறைவேறவில்லை எனக்கூறினர். அரசிடம் வேண்டினாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறினார்கள். அவர்களின் பெயரான தேவேந்திர என்பதுடன், எனது பெயரான நரேந்திர என்பதோடு ஒத்துப்போகிறது என்பதை குறிப்பிட்டேன். டில்லியில், அவர்களில் ஒருவனாக, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவனாக இருக்கிறேன் என்பதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். இந்த தீர்மானம் வெறும் பெயர் மட்டும் அல்ல. அவர்களின் கண்ணியம் பற்றியது. சுய கவுரவத்தை காக்கும்.


latest tamil newsஅவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெயர் திருத்த மசோதா, பார்லிமென்ட் கூட்டத்தில், துவக்கத்திலேயே, அவையில் கோரிக்கை வைக்கப்படும். இந்த கோரிக்கை தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-பிப்-202112:58:57 IST Report Abuse
Malick Raja நாட்டில் தற்போதைய தேவை இது மட்டுமே என்பது போல பிரமித்து அறிவார்ந்ததாக இருக்காது.. பெட்ரோல் விலை வளர்ச்சி இதனால் மறைக்கப்படலாம் என்று கருதுவதும் அறிவார்ந்ததாக இருக்காது விளங்கினால் அறிவு ..இல்லையேல் சரிவு
Rate this:
Cancel
palanichamy - Theni,இந்தியா
15-பிப்-202115:50:19 IST Report Abuse
palanichamy பாரத பிரதமர் துணிச்சலாக தேவேந்திர குல வேளாளர் என்ற அரசு ஆணை வெளியிடுவதாக அறிவித்தார். வரலாற்று சாதனை இது. பாரத பிரதமர் ஒரு மாநித்தில் உள்ள அமைப்புக்கு கோடான கோடி தேவேந்திர குல வேளாளர் மக்களின் இதயத்தில் நீங்க இடம் பிடித்து விட்டார். நன்றி என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கிவிட முடியாது. தேவேந்திர குல வேளாளர் மக்களின் அன்பை காணிக்கையாக்கி அகிலம் போற்றும் வகையில் அரசனை வெளியிட்ட நமது பாரத பிரதமர் அவர்களை போற்றி வணங்குகிறாம்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
15-பிப்-202109:58:08 IST Report Abuse
Rasheel ஒவ்வரு மனிதருக்கும் சுய கவுரவம் மற்றும் தன்மானம் மிக முக்கியம். எனவே அவர்களுடைய சுய கவுரவத்தை காத்த இந்த செயலை பாராட்டுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X