நாமக்கல்: நாமக்கலில் பிரசாரம் மேற்கொண்ட திமுக எம்.பி., கனிமொழிக்கு தடபுடலான அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
பிரசார சுற்றுப்பயணத்தின் இடையே, நேற்று மதியம், 2:40 மணிக்கு, திருச்செங்கோடு - சங்ககிரி சாலையில் உள்ள அழகர் ஓட்டலில், கனிமொழி மதிய உணவு சாப்பிட்டார். அவருக்கு, நாட்டுக் கோழி சூப், மட்டன், சிக்கன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவல், நாட்டுக் கோழி காட்டு வறுவல், மட்டன் லிவர் பெப்பர் பிரை, குண்டூர் கோழி தொடை வறுவல், நாட்டுக் கோழி தண்ணீர் குழம்பு, புளி ரசம், இளநீர் பாயாசம், பீடா பரிமாறப்பட்டது. அவற்றை ருசித்து சாப்பிட்டார். கட்சி நிர்வாகிகளும், அவருடன் சாப்பிட்டனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE