சென்னை: சென்னையில் இன்று நடந்த அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி, அவ்வையார் எழுதிய கவிதையையும், பாரதியார் எழுதிய கவிதையையும் மேற்கோள் காட்டி பேசினார்.
சென்னையில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசும் விவசாயிகள் குறித்து பேசும் போது,அவ்வையார் எழுதிய
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
என்ற கவிதையை மேற்கோள் காட்டினார்.

அதேபோல், சென்னையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி., - எம்.கே.ஐ.ஏ., ரக கவச வாகனம் குறித்து பேசும் போது,
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் என்ற பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.
அப்போது, அவையில் இருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE