தமிழ்க்கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்க்கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர்

Updated : பிப் 14, 2021 | Added : பிப் 14, 2021 | கருத்துகள் (66)
Share
சென்னை: சென்னையில் இன்று நடந்த அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி, அவ்வையார் எழுதிய கவிதையையும், பாரதியார் எழுதிய கவிதையையும் மேற்கோள் காட்டி பேசினார்.சென்னையில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசும் விவசாயிகள் குறித்து பேசும் போது,அவ்வையார் எழுதியவரப்புயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்நெல் உயரக் குடி உயரும்குடி உயரக் கோல் உயரும்கோல் உயரக் கோன் உயர்வான்என்ற
பிரதமர் மோடி, தமிழ் கவிதை, அவ்வையார், பாரதியார்,

சென்னை: சென்னையில் இன்று நடந்த அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி, அவ்வையார் எழுதிய கவிதையையும், பாரதியார் எழுதிய கவிதையையும் மேற்கோள் காட்டி பேசினார்.
சென்னையில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசும் விவசாயிகள் குறித்து பேசும் போது,அவ்வையார் எழுதிய
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்
என்ற கவிதையை மேற்கோள் காட்டினார்.


latest tamil news


அதேபோல், சென்னையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி., - எம்.கே.ஐ.ஏ., ரக கவச வாகனம் குறித்து பேசும் போது,
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் என்ற பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.
அப்போது, அவையில் இருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X