வூஹான் சோதனை; அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்ற சீனா..!

Updated : பிப் 14, 2021 | Added : பிப் 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பீஜிங்: சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. கடந்த ஓராண்டில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் லட்சக்கணக்கான குடிமக்களை பலிவாங்கியுள்ளது.இதனையடுத்து வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்று விசாரணை மேற்கொள்ள உலக சுகாதார
White House, Deep Concerns, WHO, Covid Report, Demands, Data, China

பீஜிங்: சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. கடந்த ஓராண்டில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் லட்சக்கணக்கான குடிமக்களை பலிவாங்கியுள்ளது.

இதனையடுத்து வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்று விசாரணை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் வூஹான் நகரை வந்தடைந்தனர். அங்கு உள்ள பரிசோதனை கூடத்தில் சோதனை நடத்தினர். தற்போது இந்த விசாரணை முடிவுக்கு வரவுள்ளது. இதன் அறிக்கையை வெளிப்படையாக உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.


latest tamil news



இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவான், விரைவில் உலக சுகாதார அமைப்பு இதுகுறித்த அறிக்கையை சர்வதேச அரங்கில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வழக்கமாக அமெரிக்காவின் அறிக்கைகளுக்கு வெறுப்பை உமிழும் சீன வெளியுறவுத்துறை தற்போது இதற்கு சம்மதித்துள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பட்டால் தாங்கள் அறிக்கையை விரைவில் உலகநாடுகளின் பார்வைக்கு அளிக்க தயார் என்று சீன வெளியுறவு துறை கூறியுள்ளது.

சீனாவின் இந்த நம்பிக்கையை பார்க்கும்போது தாங்கள் கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பவில்லை, விபத்தாக அது வெளியானது என்று கூறப்படுவது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
15-பிப்-202112:32:54 IST Report Abuse
G.Kirubakaran எல்லாம் சுத்தமாக துடைத்து இருப்பார்கள் . ரெகார்ட் மாற்றுவது சீனாவுக்கு காய் வந்த விஷயம்
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
15-பிப்-202108:45:41 IST Report Abuse
MANIAN K சீனா வந்த ஆட்களை சரிக்கட்டியாகிவிட்டது
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
15-பிப்-202107:16:49 IST Report Abuse
blocked user நோய் தீவிரமாக பரவும் பொழுது உலக சுகாதார நிறுவனத்தை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை... எல்லாம் முடிந்தபின் என்னதான் கண்டுபிடிக்க முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X