சிவகங்கை: ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டதாக காங்., எம்.பி., ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 3 மாதங்களாக முதல்வர் பழனிசாமி அறிவித்து வரும் திட்டங்கள் எல்லாம் மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, தீபாவளி மத்தாப்பூ போன்றது. அதனால், எந்த பயனுமில்லை. தமிழகத்தில் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை திட்டங்களை அறிவித்துள்ளனர். ஆனால், அதற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.

இலவச மின்சார வழங்கப்படும் என முதல்வர் அவர்களே, அதற்கான நிதி எங்கே? வெறும் அறிவிப்புக்கள் மட்டுமே எப்படி சாதனையாகும்? ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE