அறிவியல் ஆயிரம்
குறைந்த துாக்கத்தால் பாதிப்பு
தினமும் இரவில் குறைந்தது 7 - 8 மணி நேரம் துாங்குபவருடன் ஒப்பிடுகையில், 5 மணி நேரத்துக்கு குறைவாக துாங்குபவர்களுக்கு 'டிமென்சியா' பாதிப்பு ஏற்படுவதற்கு 2 மடங்கு வாய்ப்புள்ளது என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. 'டிமென்சியா' என்பது மூளை பாதிப்பால் ஏற்படும் மன நோய். இதனால் சிந்திக்கும் திறன், நினைவாற்றல் பாதிப்படைகிறது. பாஸ்டன் நகரில் 65 வயதுடைய 2812 பேரின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டதில் இது கண்டறியப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 7 - 8 மணி நேர துாக்கம் அவசியம் என 'ஸ்லீப் பவுன்டேஷன்' தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்
மூன்றாவது கல்லுாரி
ஆங்கிலேயர் ஆட்சியில் 1835 பிப்., 2ல் மருத்துவ பள்ளி தொடங்கப்பட்டது. இது 1850 அக்.1ல் மெட்ராஸ் மருத்துவ கல்லுாரியானது. 1857ல் மெட்ராஸ் பல்கலையின் கீழ் அங்கீகாரம் பெற்றது. 1996ல் சென்னை மருத்துவக்கல்லுாரி என பெயர் மாற்றப்பட்டது. பின் மீண்டும் மெட்ராஸ் மருத்துவ கல்லுாரி ஆனது. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி இங்கு படித்தவர். இது இந்தியாவின் மூன்றாவது பழமையான மருத்துவக்கல்லுாரி. இதற்கு முன் 1823ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரி, 1835 ஜன.28ல் கோல்கட்டா மருத்துவ கல்லுாரி தொடங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE