ராணுவ ஆட்சியை எதிர்த்து மியான்மரில் தீவிர போராட்டம்

Updated : பிப் 14, 2021 | Added : பிப் 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
யாங்கூன்:தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ஆட்சி நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதை எதிர்க்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன் சூச்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆளும் கட்சி வெற்றி பெற்றதாக, ராணுவம்

யாங்கூன்:தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ஆட்சி நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதை எதிர்க்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.



latest tamil news




மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன் சூச்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.
இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆளும் கட்சி வெற்றி பெற்றதாக, ராணுவம் குற்றம் சாட்டியது.

இந்நிலையில், சமீபத்தில், ஆங் சன் சூச்சி உள்ளிட்டோரை சிறை பிடித்து, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதை எதிர்த்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'போராட்டத்தில் ஈடுபட்டால், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. யாங்கூன், மாண்டலே, தலைநகர் நேபியிதா உட்பட பல நகரங்களில் நேற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.


latest tamil news




'மியான்மரில் நடக்கும் போராட்டங்களில் இருந்து, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது தெரிய வருகிறது. அதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு' என, மியான்மருக்கான அமெரிக்க துாதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழகம்,இந்தியா
15-பிப்-202118:09:54 IST Report Abuse
தமிழன் , இது அவர்கள் உள் நாட்டு பிரச்னை அல்லவா? இதில் ஏன் நீங்க மூக்கை நுழைக்கிறீர்கள்?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
15-பிப்-202109:08:33 IST Report Abuse
blocked user சீனா அண்டை நாடுகள் எதையும் நிம்மதியாக இருக்கவிடாது...
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
15-பிப்-202109:18:32 IST Report Abuse
அறவோன்உன் கூட்டம் சொந்தநாட்டையே நிம்மதியாக இருக்க விடவில்லையே...
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
15-பிப்-202108:13:39 IST Report Abuse
அறவோன் Muruga, ரஃபேலை வைத்து நிலத்தை உழுகப்போகிறதா சங்கக்கூட்டம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X