அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா அ.தி.மு.க.,வில் இணைய வாய்ப்புள்ளதா?

Updated : பிப் 15, 2021 | Added : பிப் 15, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வந்துவிட்டார். ஏற்கனவே பரபரப்பாக உள்ள தேர்தல் களம், மேலும் சூடு பிடித்துள்ளது. 'சசிகலா மற்றும் தினகரனை, அ.தி.மு.க.,வில் சேர்க்க மாட்டோம்' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறி வருகிறார். ஆனால், திரை மறைவில் பல விஷயங்கள் நடந்து வருகின்றன.துணை முதல்வர் பன்னீர்செல்வம், வேறொரு திட்டத்துடன் செயல்படுவதாக சொல்லப்படுகிறது.
sasikala, admk, joining, chances, சசிகலா, அதிமுக, இணைப்பு, வாய்ப்பு

சென்னை: சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வந்துவிட்டார். ஏற்கனவே பரபரப்பாக உள்ள தேர்தல் களம், மேலும் சூடு பிடித்துள்ளது. 'சசிகலா மற்றும் தினகரனை, அ.தி.மு.க.,வில் சேர்க்க மாட்டோம்' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறி வருகிறார். ஆனால், திரை மறைவில் பல விஷயங்கள் நடந்து வருகின்றன.துணை முதல்வர் பன்னீர்செல்வம், வேறொரு திட்டத்துடன் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. 'சசிகலா, தினகரனைச் சேர்த்தால், கட்சி வலிமையாக இருக்கும். தி.மு.க.,வை எதிர்க்க, இது அவசியம்' என, சொல்கிறாராம்.

இது மட்டுமல்லாமல், இருவரையும் கட்சியில் மீண்டும் சேர்க்க, ஒரு சமாதான திட்டத்தையும் அவர் கூறியுள்ளார். இதற்கு, தினகரனும், சசிகலாவும் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து தினகரனை கடுமையாக பொதுக் கூட்டங்களில் விமர்சித்து வருகிறார், இ.பி.எஸ்., இது, துணை முதல்வருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர், மனக் கசப்பில் உள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, பா.ஜ., மற்றொரு வேலையையும் செய்து வருகிறது. அ.தி.மு.க., மற்றும் சசிகலா, தினகரன் இடையே தகவல் பரிமாற்றங்களை செய்து வருகிறது.


latest tamil news


ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழகத்தில் தொழிற்சாலை வைத்துள்ளார். இவர் வாயிலாக, முதல்வருக்கு தகவல் தரப்படுகிறதாம். மற்றொரு பக்கம், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நெருக்கம். இதற்கு காரணம், சேலம் எட்டு வழிச்சாலை திட்டம். இவர் மூலமாகவும், பா.ஜ., தரப்பிலிருந்து இணைப்பு தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. அரசியல்வாதிகள் மூலம் இந்த விஷயம் நடந்தால், 'மீடியா'வுக்கு தெரிந்துவிடும் என்பதால், 'இப்படி ரகசியமாக நடக்கட்டும்' என, அமித் ஷா உத்தரவிட்டு உள்ளாராம்.


Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Rangarajan - chennai,இந்தியா
18-பிப்-202114:41:26 IST Report Abuse
A.Rangarajan If Sasikala joined in admk and bjp is helping , then no bjp supporters, well wishes will vote for bjp admk alliance. thinking that bjp is indirectlhy supporting dmk to win the elections.
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
17-பிப்-202105:41:00 IST Report Abuse
மணி எது எப்படி நடந்தாலும் சரி திரு திமுக ஆட்சிக்கு வராதிருந்தால் மக்களுக்கு நல்லது அம்புட்டுதான்
Rate this:
Cancel
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
17-பிப்-202102:42:26 IST Report Abuse
SexyGuy . முதலில் இந்த கட்சி பி.ஜெ,பி யின் பினாமி கட்சியாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மந்திரிக்கு பினாமி ஆள் மாதிரி. சீமான் போன்ற உண்மையான மண்ணின் மைந்தர்கள் ஆட்சி செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழ் நாட்டை தவிர வேறு எந்த தென்னிந்திய மாநிலத்திலும் திராவிடம் , திராவிட இனம் என்று யாரும் பேசுவதில்லை.ஆகா , எங்கு அவ்வாறு பேசுவது விட்டு, தமிழ் நாடு, இங்கு வாழும் மக்களின் எதிர்காலம் என்று பேசுவது தான் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து கொண்டு பக்கத்து வீட்டுக்காரர் நலன் பற்றி பேச மாற்றீர்கள் தானே?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X