அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்வோம்!

Updated : பிப் 15, 2021 | Added : பிப் 15, 2021 | கருத்துகள் (77)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : ஆ.சரவணமூர்த்தி, தேவாலா, நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:ஒரு காலத்தில், நாடக கலை பிரபலமாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால், அந்த கலை மெல்ல அழிந்து, இறுதி நிலைக்கு வந்துவிட்டதோ என்ற வருத்தம் இருந்தது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் பிரசாரத்தை பார்க்கையில், நாடக கலை இன்னும்
ithu ungal idam, இது உங்கள் இடம்,ஸ்டாலின், வேல், நாடகம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



ஆ.சரவணமூர்த்தி, தேவாலா, நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

ஒரு காலத்தில், நாடக கலை பிரபலமாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால், அந்த கலை மெல்ல அழிந்து, இறுதி நிலைக்கு வந்துவிட்டதோ என்ற வருத்தம் இருந்தது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் பிரசாரத்தை பார்க்கையில், நாடக கலை இன்னும் அழியவில்லை என்ற எண்ணம் பிறந்துள்ளது.

நாடக கலைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், தை மாதத்தில், கையில் வேலோடு, திருத்தணியில் நாடகத்தின் முதல் பாகத்தை நடித்து வெளியிட்டார், ஸ்டாலின். அதற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.அதைத் தொடர்ந்து, இரண்டாவது மற்றும் மூன்றாம் பாகத்தில், ஸ்டாலினை எப்படி நடிக்க வைக்கலாம் என யோசித்து வரும், நாடக இயக்குனர் பிரசாந்த் கிஷோருக்கு சில யோசனைகள்...கடவுள் மறுப்பு கொள்கையை துாக்கி வீசி, கையில் வேலோடு, தை மாதம் முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின், இரண்டாம் பாகத்தை, மாசி மாதத்தில் நடத்தலாம்.


latest tamil news


அதில், சமயபுரம் அம்மன் சன்னதியில், கையில் மண் கலயத்தில் தீ சட்டி ஏந்தி, வலம் வர செய்யலாம்.மூன்றாம் பாகத்தை, பங்குனி மாதம் பழநியில் நடத்தலாம். மஞ்சள் அல்லது பச்சை வேட்டி கட்டி, அலகு குத்தி, காவடி துாக்கினால், தமிழக மக்களின் அமோக ஆதரவை பெறலாம்.இது தவிர, கிராம சபைக் கூட்டத்தில் இடம்பெறும், கேள்வி - பதில் நிகழ்ச்சியை, இடை இடையில் நிகழ்த்தி, மக்களுக்கு அலுப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.நலிவுற்று கிடக்கும் நாடக கலை வளர்க்கும், ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
15-பிப்-202123:40:25 IST Report Abuse
sethusubramaniam வேல் எடுத்தா மட்டும் ஜெயிக்கமுடியாதுங்க . வேலையும் தெரியணும் . வேலைகாட்டவும் தெரியணும். வேலைகாட்டறவனுங்களை அடக்கவும் தெரியணும். வீரமணியை தலை மேலேயும் , திருமாவை மடியிலேயும் , கனி யம்மாவை தோள்மேலேயும் வச்சுக்கிட்டு எங்கே ஆட்சியைப் பிடிக்கறது. இவருக்கு அனுகூல சத்ருக்கள்தான் அதிகம்.
Rate this:
Cancel
K.Ayyappan - Chennai,இந்தியா
15-பிப்-202121:41:32 IST Report Abuse
K.Ayyappan ஐயே, இன்னா கண்டுபிடிச்சி வச்சே வேலை கையிலேயா புடிச்சொம் உறை கண்ணுக்குத் தெரிலீயா? கஸ்மாலம். தலீவரு இன்னா சுமார்ட்டு பாத்துக்கினீயா. நாங்க திரா விஷங்கடா. எப்பூடி தங்கைத் தலவீ வெள்ளி இல்லேன்னு தெரிஞ்ச உடனே வேணாம்னு சொல்லிச்சு. கயிதைங்களா.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
15-பிப்-202120:33:12 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த தேர்தலில் கூட்டணி வைத்தோ அல்லது தனித்தோ BJP க்கு 10 தொகுதிக்கு மேல் வெற்றி கிடைத்தால் 2026 தேர்தலில் மற்ற கட்சிகள் BJP இன் பின்னால் வரும். இந்த தேர்தலுக்கு பின்னர் DMK பல சிறு கட்சிகளாக சிதறும். admk நூலிழையில் கூட்டணி கட்சிகளின் உதவியால் தோல்வியை தவிர்க்கும். மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X