அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எங்கள் குலசாமி மோடி': தேவேந்திர குல மக்கள் பாராட்டு

Updated : பிப் 15, 2021 | Added : பிப் 15, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை : 'தேவேந்திர குல வேளாளர்' என, அழைப்பதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்தது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, பா.ம.க., மற்றும் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட சமுதாயங்களை, தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான, மசோதா தாக்கல் செய்திருப்பது
PM Modi, Modi, Narendra Modi, தேவேந்திர குல வேளாளர், பாராட்டு

சென்னை : 'தேவேந்திர குல வேளாளர்' என, அழைப்பதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்தது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, பா.ம.க., மற்றும் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட சமுதாயங்களை, தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான, மசோதா தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும், சென்னை விழாவில், பிரதமர் மோடி, 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து, எவரும் பேசுவதற்கு முன், நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன், 1989ல், மதுரை தமுக்கம் திடலில், ஒரு தாய் மக்கள் மாநாட்டை, நான் நடத்தியதும், என் மனதில் நிழலாடுகின்றன.


latest tamil news



தேவேந்திர குல வோளர்கள் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு நிறுவனர் தாஸ் பாண்டியன்: தொழில், கலாசாரம், பண்பாடு, ஜாதி கட்டமைப்பு ரீதியாக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் முன்னேற்றம் கண்டு விடும். இதற்கு அடித்தளமிட்ட பிரதமர் மோடியை, எங்கள் குலசாமியாக, தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வணங்குவர்.தமிழகத்தில், 110 சட்டசபை தொகுதிகளில், எங்களுக்கு ஓட்டு வங்கி உள்ளது. தென் மாவட்டங்களில், 20 சட்டசபை தொகுதிகளில், குறைந்தபட்சம், 90 ஆயிரம் முதல், அதிகபட்சமாக, 1 லட்சத்து, 40 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளன.

தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு, ஓட்டு அளித்து, ஏமாந்து வந்த தேவேந்திர குல வேளாளர் மக்கள், இனி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு தான் ஓட்டுப் போடுவர். எங்களுடைய, 80 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறும் வகையில், பிரதமர் மோடி அறிவித்துள்ளதை, நாங்கள் வரவேற்கிறோம்; அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magan arumugam - london,யுனைடெட் கிங்டம்
15-பிப்-202122:27:47 IST Report Abuse
magan arumugam மூர்க்கங்கள் கூவுறதுல தெரியுது உங்கள் மத மாற்ற முயற்சிக்கு பெருத்த நஷ்டம், எல்லா சாதியையும் ஒழிக்கணும் நோ திராவிடன் நோ அறியான் நாங்கள் எல்லோரும் இந்துக்கள் எங்கள் பிரச்சனைகளை நாங்கள் ஒருநாள் தீர்ப் போம் மற்ற மத அடிமைகள் வெளியேறுங்கள்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-பிப்-202120:27:41 IST Report Abuse
Ramesh Sargam மோடி அவர்கள் தமிழகத்தின் அரசியலில் மேலும் பல திருப்பங்களை ஏட்படுத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
15-பிப்-202119:42:01 IST Report Abuse
dina பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட சமுதாயங்களை, தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான, மசோதா தாக்கல் செய்திருப்பது குறித்து, அடித்தளமிட்ட பிரதமர் மோடியை, எங்கள் குலசாமியாக, தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் 'எங்கள் குலசாமி மோடி':என்று வணங்குவர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X