அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா போட்டிருக்கும் இரு திட்டங்கள்!

Updated : பிப் 15, 2021 | Added : பிப் 15, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு எதிரான செயல்பாடுகளில் இருந்ததாலே, தான் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது என, சசிகலா நினைக்கிறார். எனவே, இப்போதைக்கு வேகத்தை விட, விவேகம் தான் முக்கியம் என, கருதுகிறார்.பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தபோது, தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தன்னை பெரிய அரசியல் சக்தியாக நினைத்து, அ.தி.மு.க.,வில் இருப்பவர்கள், தன் பக்கம் அணிவகுப்பர் என நினைத்தார்.
Sasikala, admk, ammk, சசிகலா,

மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு எதிரான செயல்பாடுகளில் இருந்ததாலே, தான் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது என, சசிகலா நினைக்கிறார். எனவே, இப்போதைக்கு வேகத்தை விட, விவேகம் தான் முக்கியம் என, கருதுகிறார்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தபோது, தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தன்னை பெரிய அரசியல் சக்தியாக நினைத்து, அ.தி.மு.க.,வில் இருப்பவர்கள், தன் பக்கம் அணிவகுப்பர் என நினைத்தார். ஆனால், நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த சசிகலா, இரு திட்டங்களை வைத்துள்ளார்.

இது பற்றி, அவரின் ஆதரவாளர்கள் கூறியதாவது: எப்படியாவது, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக வேண்டும். கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக, சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் தயார் என, சசிகலா நினைக்கிறார். இப்பணியை மேற்கொள்ள சிலர் தேர்வு செய்யப்பட்டு, காலக்கெடுவும் கொடுக்கப்பட்டு உள்ளது. அது நடக்கவில்லை என்றால், இரண்டாவது திட்டம்.


latest tamil news


இந்த திட்டத்தின்படி, அ.ம.மு.க.,வின் தலைவராக சசிகலா, பொதுச்செயலர் தினகரன் என தேர்தலை சந்திப்பது; 234 தொகுதிகளிலும், அ.ம.மு.க., போட்டி, சிறிய கட்சிகளுடன் கூட்டணி என, முடிவு செய்யப்பட்டுள்ளது.அ.ம.மு.க., வெற்றி பெறாவிட்டாலும், குறைந்தபட்சம், 60 தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு அடுத்து, இரண்டாவது இடத்துக்கு வர முடியும் என, சசிகலா நினைக்கிறார்.

இப்படி, அ.தி.மு.க., -- அ.ம.மு.க., தனித்தனியாக போட்டியிட்டு தோற்று விட்டால், 1989 சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜெ.,- - ஜா., என இரு அணிகளும், அ.தி.மு.க., என ஒன்றுபட்டது போல, தன் தலைமையில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வாகி விடும் எனவும், சசிகலா கணக்கு போடுகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர். சசிகலாவின் இந்த திட்டங்களை அறிந்த, அமைச்சர்கள் சிலர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-பிப்-202104:20:58 IST Report Abuse
meenakshisundaram ஆமா இவர் மேலே நடந்த ரைடு என்னாச்சு ?
Rate this:
Cancel
Kalai Arashan - Quito,ஈக்வடார்
20-பிப்-202109:14:15 IST Report Abuse
Kalai Arashan ரொம்ப நல்ல தோழி நம் அம்மனுக்கு , வாங்க .... வாங்க........... இப்ப இல்லேனா எப்பவும் இல்லை..................
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
16-பிப்-202100:17:14 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஸ்டாலினுக்கு உதவியாளராகப் போனால், திமுகவைக் கைப்பற்றலாம் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X