பொது செய்தி

இந்தியா

கனடாவுக்கு தடுப்பூசி: மத்திய அரசு ஒப்புதல்

Updated : பிப் 15, 2021 | Added : பிப் 15, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக, இரண்டு தடுப்பூசிகள் நம் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர், துாய்மைப் பணியாளர்கள் என, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்களத்தில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.அதே நேரத்தில், அண்டை நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும், நட்பின் அடிப்படையில், தடுப்பூசிகளை மத்திய

புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக, இரண்டு தடுப்பூசிகள் நம் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர், துாய்மைப் பணியாளர்கள் என, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்களத்தில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.



latest tamil news


அதே நேரத்தில், அண்டை நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும், நட்பின் அடிப்படையில், தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியது. அத்துடன், பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளித்துள்ளது.கடந்த மாதம், 1.05 கோடி தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த மாதத்தில், 25 நாடுகளுக்கு, 2.40 கோடி மருந்துகள் அனுப்ப சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பட்டியலில் கனடா இல்லை.


latest tamil news



'எங்களுக்கு, 10 லட்சம் தடுப்பூசிகளை அளிக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியபோது, கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடியோ கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஐந்து லட்சம் மருந்துகள் அனுப்புவதற்கு, மத்திய அரசு கொள்கை அளவில் அனுமதி அளித்துள்ளது.நம் ராணுவம் சார்பில், வங்கதேசம், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் ராணுவத்துக்கு, தடுப்பூசிகள் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
15-பிப்-202118:22:15 IST Report Abuse
Nachiar இந்த செய்தி இந்திய பத்திரிகைகளில் வந்த பின் தான் கனடா பத்திரிகைகளுக்கே தெரிந்தது. பின் ஒரு இரண்டு பத்திரிகைகளில் வந்தது. கடந்த புதன் இதைப்பற்றி கனடிய பிரதமரிடம் ஒரு நிருபர் கேட்ட பொழுது பதிலே வரவில்லையாக்கும்.
Rate this:
Cancel
15-பிப்-202117:25:49 IST Report Abuse
தேச நல விரும்பி நமக்கு ஒருவர் தீங்கிழைத்தால் அவர் வெட்கப்படும் படி நல்லது செய்யனும் என்ற வள்ளுவரின் வாக்கு படியும்,தன் எதிரியாக இருந்தாலும் வாசுதேவ குடும்பத்தின் படி குடும்ப உறுப்பினராக நினைத்து உதவ வேண்டும் என்ற கீதாசரத்தின் படி வாழும் உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவர் மோடிஜி வாழ்க பல்லாண்டு.
Rate this:
Cancel
சங்கத் தமிழ் மண்ணிலிருந்து - சங்கி ட்ரூடோ, இனிமேலாவது அடக்கி வாசி கண்ணு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X