தமிழகத்துடன் சேர்த்து, கேரள சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில், ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன், காங்கிரஸ் களத்தில் இறங்கியுள்ளது.
ராகுல், வயநாடு தொகுதியின் எம்.பி.,யாக உள்ளதால், கேரளாவில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதை கவுரவ பிரச்னையாக கருதுகிறார். இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால், அது, ராகுலுக்கு தேசிய அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், கேரளாவில் காங்கிரஸ் நிலைமை சரியில்லை. சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. வழக்கம் போல ரமேஷ் சென்னிதலா ஒரு பக்கம், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்னொரு பக்கம் என, காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாகச் செயல்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE