அரசியல் செய்தி

தமிழ்நாடு

25ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Updated : பிப் 15, 2021 | Added : பிப் 15, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை :'பிரதமர் மோடி, வரும், 25ம் தேதியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 19ம் தேதியும் தமிழகம் வருகின்றனர்' என, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.தமிழகத்தில், பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க, நேற்று டில்லியில் இருந்து, தனி விமானம் வாயிலாக, பிரதமர் மோடி, சென்னை வந்தார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்,
pm Modi, TN visit, BJP, TN election

சென்னை :'பிரதமர் மோடி, வரும், 25ம் தேதியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 19ம் தேதியும் தமிழகம் வருகின்றனர்' என, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

தமிழகத்தில், பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க, நேற்று டில்லியில் இருந்து, தனி விமானம் வாயிலாக, பிரதமர் மோடி, சென்னை வந்தார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், அவர் கேரளா கிளம்பி சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடி இந்த மாதம் மீண்டும் தமிழகம் வருவார் என தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.


latest tamil news


சென்னையில், அவரது பேட்டி: தமிழகத்திற்கு, 25ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் வருகிறார். கோவை வரும் அவர், அரசு மற்றும் பா.ஜ., நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இதேபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 19ம் தேதி தமிழகம் வருகிறார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 21ம் தேதி சேலம் வருகிறார். இவ்வாறு, சி.டி.ரவி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-202104:22:38 IST Report Abuse
J.V. Iyer பிரதமர் அவர்களே இதை நீங்கள் ஆளும் நாடு. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தமிழகம் வரலாம். மனமார உங்களை வரவேற்கிறோம். தமிழகம் உங்களை என்றும் வரவேற்கும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-202123:40:49 IST Report Abuse
தமிழவேல் அப்போ, பழனி திரும்பவும் கால்ல விழ பழகியாகனும்...
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
15-பிப்-202119:39:19 IST Report Abuse
Raj அடுத்த பிரியாணி பொட்டலம் ரெடி . நோட்டா கட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X