நாட்டில் 2வது இடத்தில், தமிழகம்., புள்ளி விபரங்களை மறந்து பேசுகிறீர்களா; மறக்கடிக்கிறீர்களா...

Updated : பிப் 15, 2021 | Added : பிப் 15, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள, அ.தி.மு.க., அரசு, எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை; புதிய வேலைவாய்ப்பு உருவாகவில்லை; தொழில் முதலீடு எதுவும் வரவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் அறிவிப்புகளை தான், இ.பி.எஸ்., அரசு செய்கிறது.- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி.,'நாட்டில் இரண்டாவது இடத்தில், தமிழகம் உள்ளது. புள்ளி விபரங்களை மறந்து பேசுகிறீர்களா;
நாட்டில் 2வது இடத்தில், தமிழகம்., புள்ளி விபரங்களை மறந்து பேசுகிறீர்களா; மறக்கடிக்கிறீர்களா...

கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள, அ.தி.மு.க., அரசு, எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை; புதிய வேலைவாய்ப்பு உருவாகவில்லை; தொழில் முதலீடு எதுவும் வரவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் அறிவிப்புகளை தான், இ.பி.எஸ்., அரசு செய்கிறது.
- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி.,


'நாட்டில் இரண்டாவது இடத்தில், தமிழகம் உள்ளது. புள்ளி விபரங்களை மறந்து பேசுகிறீர்களா; மறக்கடிக்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு.



சசிகலா காலை பிடித்து, முதல்வராக வந்தவர், இ.பி.எஸ்., பின் சசிகலா காலையே வாரிவிட்டார். இப்படி முதல்வர் ஆனவருக்கு மக்கள் பிரச்னைகள் எப்படி தெரியும்?
- தி.மு.க. இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின்


'முதல்வராக அறிவிக்கப்பட்ட பின் தான், உருக்கத்தில், சசி காலை, இ.பி.எஸ்., பிடித்தார். அதற்கு முன், காலை பிடிக்கவில்லை...' என, கிண்டலாக, திருத்த தோன்றும் வகையில், தி.மு.க. இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின்.



காங்., - எம்.பி., ராகுல் கூறுவது போல, பிரதமர் மோடி, சீனாவிற்கு பயப்படவும் இல்லை; அதற்கான அவசியமும் இல்லை.'இப்படித்தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், சில ஆண்டுகளுக்கு முன் கூறினார்.
- பா.ஜ., மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்


'மோடியைப் பார்த்து, பார்லி.,யில், ராகுல் தான் பயப்படுவது போல தெரிகிறது...' என, கூறத் துாண்டும் வகையில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.



வரவேற்பு பலகைகளில் என் மகன் துரை வையாபுரியின் படத்தை, தொண்டர்கள் ஆர்வத்தால் வைத்துள்ளனர். அவருக்கு கட்சியில் எந்த பதவியும் கிடையாது. தேர்தலிலும் போட்டியிட மாட்டார்.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ


latest tamil news




இப்போது, அவர் மகன், கட்சியின் இரண்டாவது பெரிய தலைவர்...' என, கூறத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி.



விவசாயிகளின், 50 ஆண்டு கனவான - அத்திக்கடவு - அவிநாசி திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள, முதல்வர் இ.பி.எஸ்.,சை வரவேற்கிறோம்.
- உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து


'அப்போ, விவசாயிகள், உழவர் ஓட்டுகள் எல்லாம், இ.பி.எஸ்.,சுக்குத் தானா...' என, கேட்கத் தோன்றும் வகையில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேச்சு.



ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதையே எங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக வைத்து, மக்களிடையே கொண்டு செல்வோம். தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியாக உள்ளது.
- தமிழக காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார்


'கூட்டணி உறுதியாக இருந்து என்ன பயன்... ஓட்டு கிடைக்க வேண்டுமே என்பதால் தான், 'டவுட்'டாக கூறுகிறீர்களோ...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
15-பிப்-202123:22:17 IST Report Abuse
sethusubramaniam மத்திய உளறல் மன்னனும் , மாநில உளறல் மன்னனும் நல்ல ஜோடி. பிரிச்சிராதீங்கப்பா ,
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
15-பிப்-202122:16:06 IST Report Abuse
adalarasan தி.மு.க.குறிப்பிடும் பல புள்ளிவரங்கால், பொய்,புரளி.இப்படியே பேசி,பேசி, தமிழ்நாட்டை கிட்டத்தட்ட 50 வருடங்கள், ஆண்டு,பெரும்,பணக்கார குடும்பமாக, திகழ்கிறார்கள்.மத்தியில், பா.ஜெ.க, காங்கிரஸ் உடன் கூட்டணியில், பசை உள்ள , அமைசகர்க, பதவிகளை பெற்று,மத்தியில், கூட்டாட்சி, மாநிலத்தில், மக்கள் ஆட்சி என்று வசனம், பேசி,நாட்டிற்கு என்ன செய்தார்கள் என்று, தமிழக மக்கள்தான், ஆராய்ந்து, தங்கள், ஓட்டுக்களை, இன்னமும் ஏமாந்துபோகாமல், செலுத்தனம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-பிப்-202120:56:06 IST Report Abuse
Ramesh Sargam தி.மு.க. ஆட்சியில் இருந்த அத்துணை வருடங்களும், தமிழகம், நாட்டிலேயே முதல் இடத்தில் இருந்தது. எதில் ? ஊழல், கொலை, கொள்ளை, கட்பழிப்பு, திருட்டுத்தனம், என்று பலவற்றில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X