கோவை: கோவையில் நடைபெற்ற சர்வமத திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என பேசினார்.
கோவை பேரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, 123 ஜோடிகளுக்கு 73 சீர் வரிசைகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் சர்வமத திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக; நமக்கு சாதி, மதம் பேதமில்லை. திருமண உதவி திட்டத்தின் கீழ் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மணமக்களுக்கு சீர்வரிசை கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான். ஏழை மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் ஜெயலலிதா. காற்றில் பறக்கவிடும் வாக்குறுதிகளை அளிப்பது திமுக தான். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ‛ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றி கடன் ஆற்ற வேண்டும்,' எனப் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE