முதல் பெண் விமானி
'லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்' என்ற 'சினஸ் 912' விமானம் மூலம் அட்லாண்டிக் கடலை கடந்த உலகின் முதல் பெண்மணி என்ற சாதனையை இந்திய பைலட் ஆரோஹி பண்டிட் பெற்றுள்ளார். 23 வயதான இவர், மும்பையை சேர்ந்தவர். பிரிட்டனின்
ஸ்காட்லாந்தில் புறப்பட்ட இவர், 3 ஆயிரம் கி.மீ., துாரம் பயணம் செய்து, கனடாவில் தரையிறங்கினார். இடையில் கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்தில் தரையிறங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். கனடாவில் இருந்து பின் ரஷ்யாவுக்கு பறந்து
சென்றார்.
தகவல் சுரங்கம்
சிறிய பாலைவனம்
மரங்களே இல்லாத மணல் சூழ்ந்த பகுதி 'பாலைவனம்' என அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய பாலைவனம் 'சஹாரா பாலைவனம்' என்பது அறிந்ததே. இதே போல கனடாவில் உள்ள 'கார்கிராஸ் பாலைவனம்' உலகின் சிறிய பாலைவனம் என்ற
பெயரை பெற்றுள்ளது. இதன் பரப்பளவு 640 ஏக்கர் மட்டுமே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ஏரி இருந்தது. நாளடைவில் இது பாலைவனமாக மாறியது. இப்பாலைவனம் அருகில் பென்னெட் என்ற ஏரி இருக்கிறது. இதன் சுற்றுப்புற பகுதிகளை விட இங்கு மழைப்பொழிவு மிகவும் குறைவு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE