காலிஸ்தான் அமைப்பு சதி: கிரேட்டா 'டூல்கிட்' விவகாரத்தில் பகீர்

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 15, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி :புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் வெளியிட்ட, 'டூல்கிட்' எனப்படும், போராட்டம் தொடர்பான தகவல் தொகுப்பு, சர்ச்சையை ஏற்படுத்தியது.அந்த டூல்கிட்டை உருவாக்கிய திஷா ரவி, நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு உள்ளிட்டோருக்கு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு அமைப்புடன் தொடர்பு
Toolkit, Toolkit conspiracy case, Republic Day Violence, Disha, Jan 26 violence, Delhi Police, காலிஸ்தான் , சதி, கிரேட்டா,டூல்கிட்

புதுடில்லி :புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் வெளியிட்ட, 'டூல்கிட்' எனப்படும், போராட்டம் தொடர்பான தகவல் தொகுப்பு, சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த டூல்கிட்டை உருவாக்கிய திஷா ரவி, நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு உள்ளிட்டோருக்கு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு அமைப்புடன் தொடர்பு இருப்பதும், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறையை, அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகி உள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று, டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை அரங்கேறியது. அந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் சகோதரி மகள் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட சில சர்வதேச பிரபலங்கள், 'டுவிட்டர்' வாயிலாக, பதிவுகளை வெளியிட்டனர்.

நம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் கருத்து தெரிவித்த அவர்களுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.கிரேட்டா தம்பர்க் வெளியிட்ட, 'டூல்கிட்' எனப்படும், போராட்டம் தொடர்பான தகவல் தொகுப்பு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. டுவிட்டர் வாயிலாக புரட்சி செய்வது; வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதரகங்களுக்கு வெளியே போராட்டம் நடத்துவது போன்ற செயல்களில்ஈடுபடும்படி, அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.


சந்தேகம்


வன்முறையை துாண்டும் வகையிலான இந்த டூல்கிட்டை, காலிஸ்தான் அமைப்பினர் உருவாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில், கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த, சுற்றுச் சூழல் ஆர்வலரான, திஷா ரவி, 21, என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரை, போலீசார் ஐந்து நாள் காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சமூக ஆர்வலர்களான நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனுவுக்கு எதிராக, ஜாமினில் வெளிவரமுடியாத கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து, டில்லி போலீஸ் இணை ஆணையர் பிரேம் நாத், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, சமூக ஊடகங்களில், போலி செய்திகள், புகைப்படங்கள் மற்றும் 'வீடியோ'க்கள், அதிக அளவில் பகிரப்பட்டு வந்தன.டூல்கிட் மின்னணு ஆவணம், எங்கள் கவனத்திற்கு வந்தது. அது, 'பொயட்டிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன்' எனப்படும், கனடாவில் செயல்படும், காலிஸ்தான் ஆதரவு அமைப்பால் உருவாக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தோம்.

இந்த வழக்கில் தொடர்புடைய திஷா ரவி, நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு உள்ளிட்ட மூவருக்கும், பொயட்டிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர், எம்.ஓ. தலிவாலுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இந்த தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர், நிகிதாவின் கனடா நாட்டு தோழி புனீத். குடியரசு தினத்திற்கு சில வாரங்களுக்கு முன், 'ஜூம்' செயலியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.


டூல்கிட்


தலிவால் பங்கேற்ற அந்த கூட்டத்தில், நிகிதா, திஷா, சாந்தனு உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். டுவிட்டரில் புரட்சியை ஏற்படுத்துவது குறித்து, அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, 'வாட்ஸ் ஆப்' செயலியில் குழு ஒன்றை உருவாக்கிய திஷா, அதிலுள்ள உறுப்பினர்கள் அளிக்கும் கருத்துக்களை சேர்த்து, அந்த டூல்கிட்டை உருவாக்கி இருக்கிறார்.

மேலும், கிரேட்டா தம்பர்கிற்கு, அந்த டூல்கிட்டை, 'டெலகிராம்' செயலி வாயிலாக அவர் பகிர்ந்துள்ளார்.கடந்த, 23ம் தேதி முதல், குடியரசு தினம் வரை, 'ஹேஷ்டேக்' மற்றும் 'டுவீட்'கள் வாயிலாக, டுவிட்டரில் புரட்சியை ஏற்படுத்துவது, குடியரசு தினத்தன்று வன்முறைகளில் ஈடுபடுவது, இந்திய துாதரகங்களுக்கு வெளியே போராட்டம் நடத்துவது போன்றவை, அந்த டூல்கிட்டில் பட்டியலிடப்பட்டிருந்தன.

'குளோபல் பார்மர்ஸ் ஸ்ட்ரைக் அண்ட் குளோபல் டே ஆப் ஆக்ஷன், 26 ஜனவரி' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அந்த டூல்கிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கும், சமீபத்தில் அரங்கேறிய சம்பவங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், டில்லி வன்முறை, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.மத்திய அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்த டூல்கிட் தயாரிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகி உள்ள நிகிதா மற்றும் சாந்தனுவை தேடி வருகிறோம். அவர்களுக்கு எதிராக, ஜாமினில் வெளிவரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிகிதா ஜேக்கப் வீட்டில், போலீசார் நடத்திய சோதனையில், இரண்டு, 'லேப்டாப்'களும், ஒரு மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில், இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி, நிகிதா ஜேக்கப், மும்பை உயர் நீதிமன்றத்தில், நேற்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை, இன்று உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.


கடும் கண்டனம்


சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா கைது செய்யப்பட்டதற்கு, சமூக ஆர்வலர்கள், பருவ நிலை ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து, பெண்களுக்கான சங்கத்தின் தலைவர் கவிதா கிருஷ்ணன் கூறுகையில், ''திஷா ரவி போன்றோர், நம் நாட்டின் நம்பிக்கையாக திகழ்கின்றனர். அவரை, உடனடியாக விடுவிக்கவேண்டும்,'' என்றார்.

இதேபோல், இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் கூறுகையில், ''நாட்டின் இளம் சிறுமியர் மற்றும் பெண்களின் குரல்களை ஒடுக்கும் முயற்சி இது. எனினும், எதிர்காலத்திற்கான எங்கள் போராட்டத்தை, இதனால் தடுத்து நிறுத்த முடியாது,'' என்றார்.

பாக்., பிரதமர் இம்ரான் கானின் பாக்., தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின்கீழ் நடக்கும் ஆட்சியில், அனைவரின் குரல்களும் ஒடுக்கப்படுகின்றன. தற்போது, திஷா ரவி என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வார்த்தைப் போர்!


திஷா ரவி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் காங்., தலைவர் ராகுல், 'நீங்கள் சுதந்திரமாக பேசலாம். உண்மை இன்னும் உயிருடன் இருக்கிறது என சொல்லுங்கள். இந்தியா அமைதியாக இருக்காது' என, குறிப்பிட்டுள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''திஷா ரவியின் கைது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல். விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது குற்றமல்ல,'' என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், ''வயது என்பது ஒரு பொருட்டாக இருக்குமானால், 21 வயதில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி அருண் கேதர்பாலை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். டூல்கிட் பிரசாரகர்களை நினைத்து பெருமைப்படவில்லை,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthuraman - Wasington DC,யூ.எஸ்.ஏ
17-பிப்-202102:26:41 IST Report Abuse
Muthuraman நம்ம பப்புவும் மற்றவர்களும் அதிகம் ஆதரிக்கும் திஷா ரவி, க்ரெட்டா தன்பர்க், சாந்தனு ஆகியோர் எல்லாம் நம் நாட்டுக்கு எதிராக சட்டவிரோதமாக போராட்டம் நடத்தும் கும்பல்களின் ஆதரவாளர்களே..டெல்லியில் என்ன என்ன நாட்களில் என்ன போராட்டம் செய்யவேண்டும் என்றும், குடியரசு நாளில் என்ன செய்யவேண்டும் என்றும் டிசம்பரிலேயே திட்டம் போட்டு தீர்மானித்தவர்கள் தான் இவர்கள்..இவர்களுக்கு வெளிநாட்டு பணம் விளையாடியது...கனடா நாட்டை மிரட்டி காலிஸ்தான் கூட்டமும் லண்டனில் உள்ள காலிஸ்தான் கூட்டமும் ஹவாலாவாக அனுப்பிய பணம் தான் இந்த விவசாயிகள் என்ற போர்வையில் நடந்த வன்முறைக்கு உபயோகப்படுத்தப்பட்டது..இந்த விவசாய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களே அன்றி வேறு யாரும் இல்லை.. மோடி அரசு எச்சரிக்கை செய்ததாலேயே கனடா அரசும் பிரிட்டிஷ் அரசும் அடங்கின..இந்த போராளிகளுக்கு பாகிஸ்தான் மிகவும் ஆதரவு கொடுத்தது.. இப்படிப்பட்ட நாட்டுப்பற்று சிறிதும் இல்லாத திஷா போன்றவர்களுக்கு குரல் கொடுக்கும் பப்பு போன்றவர்களும் தேசத்துரோகிகள் அவர்கள்..இப்படிப்பட்ட தேசத்துரோகிகளுக்கு ஒரு நூறு வருடம் கடுங்காவல் தண்டனை தான் சிறந்தது..இப்படிப்பட்ட துரோகிகளுக்கு ரஷ்யாவின் புடின் வைத்தியம் தான் சரி..
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-பிப்-202123:31:15 IST Report Abuse
Rajagopal இந்த "விவசாயிகள்" போராட்டத்தினால் அடைந்த நஷ்டம், இழப்பு போன்றவற்றிற்கு ஈடான தொகையை இவர்களுக்கு அபராதமாக விதிக்க வேண்டும். அதைக் கட்ட முடியாவிட்டால் சிறைக்கு அனுப்ப வேண்டும்.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
16-பிப்-202123:30:40 IST Report Abuse
PRAKASH.P Then how about elections toolkits??
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-பிப்-202112:42:53 IST Report Abuse
கல்யாணராமன் சு.does an election toolkit advocate violence ? if it does, then the editors of those toolkit must also be treated the same way like these editiors..... are you suggesting that these editors of the toolkit must be let free ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X