அரசியல் செய்தி

தமிழ்நாடு

இருமுறை எம்.எல்.ஏ.,ஆக இருந்தவர்: அரசிடம் இலவச வீடு கேட்டு மனு

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 15, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
மதுரை : வயதான காலத்தில் தள்ளாடும் மனைவியுடன் குடியிருக்க இலவச வீடு வழங்கக் கோரி மதுரையில் டி.ஆர்.ஒ., செந்தில்குமாரியிடம் மனு அளித்திருக்கிறார் இரு முறை எம்.எல்.ஏ.,ஆக இருந்த மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் நன்மாறன் 72. இன்றைய அரசியல் வட்டாரத்தில் சாதாரண வட்ட, கிளை செயலாளர்களே சொகுசு கார்கள், ஆடம்பர பங்களா என ஒரு பெரிய ஆதரவாளர்கள் பட்டாளத்துடன் வலம் வருகின்றனர்.
Former MLA, Nanmaran, house, Pradhan Mantri Awas Yojana

மதுரை : வயதான காலத்தில் தள்ளாடும் மனைவியுடன் குடியிருக்க இலவச வீடு வழங்கக் கோரி மதுரையில் டி.ஆர்.ஒ., செந்தில்குமாரியிடம் மனு அளித்திருக்கிறார் இரு முறை எம்.எல்.ஏ.,ஆக இருந்த மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் நன்மாறன் 72.

இன்றைய அரசியல் வட்டாரத்தில் சாதாரண வட்ட, கிளை செயலாளர்களே சொகுசு கார்கள், ஆடம்பர பங்களா என ஒரு பெரிய ஆதரவாளர்கள் பட்டாளத்துடன் வலம் வருகின்றனர். அவர்களுக்கு மத்தியில் இரண்டு முறை எம்.எல்.ஏ., ஆக இருந்த போதும் இன்றும் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் நன்மாறன், குடிசைமாற்று வாரியம் சார்பில் ராஜாக்கூரில் கட்டப்பட்ட வீடுகளில் ஒன்றை ஒதுக்கி தரும்படி நேற்று மனு அளிக்க மனைவி சண்முகவள்ளியுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார்.

மேடை கலைவாணர் என தமிழகத்தில் அறியப்பட்ட நன்மாறன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை தலைவராக இருக்கிறார். மார்க்சிஸ்ட் சார்பில் அ.தி.மு.க., கூட்டணியில் முந்தைய மதுரை கிழக்கு தொகுதியில்(தற்போது மதுரை தெற்கு) 2001 ல் எம்.எல்.ஏ., ஆனார். பின் அடுத்த தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் அதே தொகுதியில் 2006ல் எம்.எல்.ஏ., ஆனார்.

எம்.எல்.ஏ., சம்பளம், ஓய்வூதியத்தை கட்சி விதியின்படி கட்சி எடுத்து கொள்ள ஒப்பு கொண்டார். இதனால் கட்சி வழங்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். மகன்கள் குணசேகரன், ராஜசேகரன் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.

தற்போது மனைவியுடன் மேலப்பொன்னகரம் பிராட்வேயில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். முதுமை காரணமாக முன்பு போல கட்சி கூட்டங்களுக்கு அடிக்கடி செல்ல முடியாததால் போதிய வருவாய் இல்லை.நன்மாறன் கூறுகையில், ''அரசு விதிகளின்படி ஏழை மக்களுக்கு வழங்குவதை போன்று நான் குடியிருக்க ராஜாக்கூரில் தரைதளத்தில் ஒரு வீடு ஒதுக்கி தரும்படி மனு கொடுத்திருக்கிறேன்,'' என்றார்.


'கையில் ரூ.10 மட்டுமே உள்ளது'


அண்மையில் டவுன் பஸ்சில் வந்து அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது ஒரு செருப்பு மாயமாக அதை தேடி கொண்டிருந்தார் நன்மாறன். அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் அடையாளம் கண்டு செருப்பை தேடி கண்டுபிடித்து தந்துள்ளார். எங்கு செல்ல வேண்டும் என டிரைவர் கேட்க ''கையில் பணம் இல்லை. ரூ.10 மட்டுமே உள்ளது. முடிந்தால் என்னை பாண்டிகோயிலில் இறக்கிவிட முடியுமா,'' என நன்மாறன் அப்பாவியாக கேட்டிருக்கிறார்.

அவரது நிலையை உணர்ந்து அவரை தன் ஆட்டோவில் அழைத்து சென்று பாண்டி கோயிலில் இறக்கி விட்டு சென்றார் அந்த ஆட்டோ டிரைவர். இந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள் பிரச்னைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பஸ் ஏறி மனு கொடுக்க வருவதையும் நன்மாறன் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
17-பிப்-202116:44:47 IST Report Abuse
Darmavan MLA வுக்கு ஏன் இலவசம். பெரிய தாயகம் செய்துவிட்டாரா.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-பிப்-202116:19:28 IST Report Abuse
Bhaskaran அவருடைய ஓய்வூதியம் அவர் குடும்பத்துக்கு உரியது அதைபோய் கட்சி எப்படி உரிமை கொண்டாட முடியும்
Rate this:
Cancel
Thangaraj S - Pattabiram, Chennai,இந்தியா
17-பிப்-202111:05:12 IST Report Abuse
Thangaraj S MLA பென்ஷன் கொடுக்குறாங்க இல்ல.
Rate this:
jagan - Chennai,இலங்கை
17-பிப்-202121:50:43 IST Report Abuse
jagan"எம்.எல்.ஏ., சம்பளம், ஓய்வூதியத்தை கட்சி விதியின்படி கட்சி எடுத்து கொள்ள ஒப்பு கொண்டார்." - மொதல்ல செய்தியை படி அப்பல பெனாத்தலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X