அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : வேட்பாளர் சிக்கி இருக்கிறாரா?

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், பணப் பட்டுவாடாவைத் தடுக்க, தீவிரமாகக் கண்காணிக்கப் போகிறதாம், தேர்தல் கமிஷன். இதைப் படித்த போது, சிரிப்பு தான் வருகிறது.தமிழகத்தில் உள்ள, 234 தொகுதியிலும்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், பணப் பட்டுவாடாவைத் தடுக்க, தீவிரமாகக் கண்காணிக்கப் போகிறதாம், தேர்தல் கமிஷன். இதைப் படித்த போது, சிரிப்பு தான் வருகிறது.தமிழகத்தில் உள்ள, 234 தொகுதியிலும் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்குவதற்கு அரசியல் கட்சியினரும்; 'பணம் பெற்ற பின் தான் ஓட்டளிப்போம்' என தமிழக மக்களும், தயாராக உள்ளனர். ஒரு வேட்பாளர் பணமோ, பரிசுப் பொருளோ கொடுத்து, தனக்கு ஓட்டு அளிக்கும்படி, வாக்காளர்களைத் துாண்டுவது குற்றம் என, சட்டம் தெளிவாகக் கூறுகிறது.latest tamil newsஆனால் இந்த சட்டத்தின்படி ஒரு வேட்பாளரோ அல்லது வாக்காளரோ தண்டிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? மக்களை நேரில் சந்தித்து பணம் கொடுக்குமளவுக்கு, கட்சியின் தலைவர்களும், வேட்பாளர்களும் முட்டாள்கள் அல்ல. அந்தந்த பகுதியிலுள்ள கவுன்சிலர், வட்டச் செயலரிடம் பணத்தை ஒப்படைப்பர். அவர்கள் நடு ராத்திரி, 1:00 மணிக்கு, வாக்காளர்களின் வீட்டுக் கதவைத் தட்டி, பணப்பட்டுவாடாவை கச்சிதமாக செய்து முடித்து விடுகின்றனர்.வாக்காளப் பெருமக்களும், தங்கள் ஓட்டை விற்று, பணம் பெறுவதற்காக கண்விழித்துக் காத்திருப்பர். இது தான் ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கிறது.


latest tamil newsதேர்தல் நெருங்கும்போது பணப் பட்டுவாடாவைத் தடுப்பதற்காக, பறக்கும்படை அமைக்கப்பட்டு, வாகன பரிசோதனை தீவிரப்படுத்தப்படுகிறது. அதில் பாதிக்கப்படுவது என்னவோ வியாபாரிகளும், அப்பாவி பொதுமக்களும் தான்.தப்பித் தவறி, அரசியல்வாதி யாராது சிக்கினாலும், அவர் சாதாரண தொண்டராகத் தான் இருப்பார்; கட்சித்தலைவரும், வேட்பாளரும் கையும் களவுமாக சிக்குவதே இல்லை. எய்தவன் எங்கோ இருக்கும்போது, அம்பை நோவது ஏன்? தவறு செய்யத் துாண்டுவது, பெரும் குற்றம் என, சட்டம் கூறுகையில், ஓட்டுக்கு பணம் வினியோகிக்க சொன்ன வேட்பாளரை கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?

பணம் கொடுக்கும் வேட்பாளருக்கும், வாங்கும் வாக்காளருக்கும் சிறைத் தண்டனை வழங்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வினியோகிக்கும், 'தில்லாலங்கடி' அரசியல்வாதிகளை, தேர்தல் கமிஷனால் ஒண்ணும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
17-பிப்-202101:11:02 IST Report Abuse
oce ஆதரவாளர்கள் என்ன ஆகாயத்தில் இருந்து குதித்தா உங்களிடம் வருகிறார்கள். கடசியை ஆதரிக்காதவர் பொது மக்கள் அதை ஆதரித்தால் ஆதரவாளர்கள்.இது நிலையான நோக்கமல்ல. அவ்வப்போது மாறுதலுக்குட்பட்ட தற்காலிக நிகழ்வு. பொதுமக்கள் என்பது மாவு. அதை ஆதரவு என்ற தோசையாகவும் அல்லது பொது இட்லியாகவும் பயன்படுத்தலாம். இட்லி பொது மக்கள்.ஆதரவாளர்கள் ருசியேற்றும் தோசை. இரண்டுக்கும் மாவு ஒன்று தான்.நீ சொல்வதை யாரும் நம்ப மாட்டான். ஏமாற்றாதே.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
16-பிப்-202123:50:47 IST Report Abuse
SaiBaba அதாவது எம் எல் ஏ, எம் பி, முதல்வர், எதிர்கட்சித் தலைவர் என்றெல்லாம் ஆகி விட்டால் அவர்கள் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தானே சட்ட இயக்குனர்கள்.
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
16-பிப்-202123:03:36 IST Report Abuse
sethusubramaniam இதையெல்லாம் போய் சீரியஸா எடுத்துகாதீங்கய்யா . துரைமுருகன் வீட்டுலேயும் திமுக நண்பர்கள் வீட்டுலேயும் கவர்லே போட்டு வச்சிருந்த பணம் கைப்பற்றியும் , அவர் மகனை ஒன்னும் பண்ண முடியலே . மக்களும் அவரைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X