அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினிடம் பெண் அளித்த மனு : சமூக வலைதளங்களில் 'வைரல்'

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (101)
Share
Advertisement
நாகப்பட்டினம் :பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில் தீர்வு காணப்படும் எனக் கூறி, தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.நாகை அடுத்த பி.ஆர்.புரத்தில், 'உங்கள் பகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கைநல்லுாரைச் சேர்ந்த வசந்தி, 48, என்பவர்
ஸ்டாலினிடம் பெண் அளித்த மனு   சமூக வலைதளங்களில் 'வைரல்'

நாகப்பட்டினம் :பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில் தீர்வு காணப்படும் எனக் கூறி, தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

நாகை அடுத்த பி.ஆர்.புரத்தில், 'உங்கள் பகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கைநல்லுாரைச் சேர்ந்த வசந்தி, 48, என்பவர் பங்கேற்று மனு அளித்தார். தற்போது இந்த மனு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மனுவில் வசந்தி கூறியிருப்பதாவது:
தி.மு.க., கீழையூர் ஒன்றிய செயலரும், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவருமான, தாமஸ் ஆல்வா எடிசன், எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான, வேளாங்கண்ணியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்து விட்டார்.

3 கோடி மதிப்பு நிலம் பறிப்பு திமுக நிர்வாகி மீது பெண் புகார்! ஸ்டாலினிடம் கொடுத்த மனு வேகமாக பரவுகிறது

போலீசில் புகார் அளித்தும், தனக்குள்ள செல்வாக்கால், எடிசன் தப்பி வருகிறார். எடிசன் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எங்கள் நிலத்தை மீட்டுத் தர வேண்டும்.


latest tamil news



இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.வசந்தியின் மகன் சந்தோஷ் கூறியதாவது: எங்கள் குடும்ப சொத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து, தாமஸ் ஆல்வா எடிசன் ஆக்கிரமித்துள்ளார். அரசியல் செல்வாக்கு காரணமாக, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பி வருகிறார். எனவே, அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரிடமே நேரடியாக மனு கொடுக்கச் சென்றோம்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில், மனுவை போடுங்கள்; தலைவர் மைக்கில் கூப்பிடுவார். அப்போது, குறைகளை கூறலாம் என்றனர். ஆனால், எங்களை மைக்கில் அழைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kesavan u s a - new york,யூ.எஸ்.ஏ
21-பிப்-202122:01:55 IST Report Abuse
kesavan u s a இது ஒன்னும் ஒரு ப்ரோப்லேம் இல்லை . உங்க பெயரை தாமஸ் அல்வா எடிசன்னு மாட்தி வச்சிட்டா போச்சு
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
21-பிப்-202104:13:07 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் வச்சிருக்கிற பெட்டியில் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் 'காசு ' போட சொல்லி திமுக கேட்கும் -தேர்தல் நிதி என்கிற பெயரில் .மக்களே ஏமாந்துடாதீங்க
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-202117:30:59 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  ஹா ஹா.. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி கவிதாயினி தான் எம் பி ராஜினாமா கடிதத்த அவுக அப்பாருகிட்ட கொடுத்துச்சு .. அந்த மாதிரி இந்த பயலுவல பத்தி புகார் எழுதி இந்த பயலுவகிட்டயே கொடுத்தா அந்த புகார் கதி? அதோ கதி... என்ன சொடல இதெல்லாம் ... என்ன தயா இதெல்லாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X