சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. எஸ்.பி., அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிதிண்டுக்கல் : குடும்ப பிரச்னை காரணமாக எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.2. ரூ.53 கோடி ஜி.எஸ்.டி., மோசடிசென்னை : ஜி.எஸ்.டி.,யில், 299 கோடி ரூபாய்க்கு போலி, 'பில்' தயாரித்து, 53.35 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரி மோசடி செய்தது தொடர்பாக, ஏழு பேர் கைது


தமிழக நிகழ்வுகள்


1. எஸ்.பி., அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் : குடும்ப பிரச்னை காரணமாக எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.latest tamil news2. ரூ.53 கோடி ஜி.எஸ்.டி., மோசடி
சென்னை : ஜி.எஸ்.டி.,யில், 299 கோடி ரூபாய்க்கு போலி, 'பில்' தயாரித்து, 53.35 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரி மோசடி செய்தது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3. கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொலை: மனைவி கைது
திருச்சி : பெரம்பலூரில் கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார்கேட் இரூரைச் சேர்ந்தவர், முத்து, 49. இவர், நெடுஞ்சாலைத் துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வந்தார். சிறுகனுார் அருகே காட்டுப் பகுதியில் வைத்து, இரு பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், முத்துவை வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக, சிறுகனுார் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துவின் மனைவி சித்ராவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலம்பரசன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்பதும், அதை கண்டித்ததால் முத்து கொலை செய்யப்பட்டார் என்றும் தெரிந்தது. இதையடுத்து முத்துவின் மனைவி, சித்ரா, 28, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலன் சிலம்பரசன், அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


latest tamil news4. படகு சவாரியில் பட்டாசு: விசாரணைக்கு உத்தரவு
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியின்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.
கொடைக்கானல் ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நகராட்சி சார்பில் படகு சவாரி நடக்கிறது. நேற்று மாலை ஏரி அருகே உள்ள நட்சத்திர விடுதியில் திருமண ஏற்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சுற்றுலா வளர்ச்சி கழக படகை வாடகைக்கு எடுத்து அலங்காரம் செய்து விழாவுக்கு வந்தவர்கள் சவாரி சென்றனர்.தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எடுத்து சென்றவர்கள் ஏரியின் மத்தியில் புஷ்வாணம், கம்பி மத்தாப்பு மற்றும் ஒளிரும் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடினர். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையாகி உள்ளது.


latest tamil news


Advertisement4. அ.ம.மு.க., பிரமுகர் வெட்டி கொலை
திருப்பத்துார் மாவட்டம் கவுதம்பேட்டையை சேர்ந்தவர் வானவராயன், 30; ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அ.ம.மு.க., மாவட்ட மாணவரணி செயலராக இருந்தார். நேற்று மாலை, 5:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த அவரை, மர்ம நபர்கள் விரட்டிச்சென்று, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.திருப்பத்துார் நகர போலீசார் , கொலையாளிகளை பிடிக்க, தனிப்படை அமைத்துள்ளனர். சொத்து தகராறு, பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற பிரச்னைகளால் உறவினர்களுக்கு இடையே நடந்த தகராறில், வானவராயன் கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது.

5. 74 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி 90ம் காலனி பகுதியில் ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைத்துள்ளதாக, திருப்பாலைக்குடி போலீசாருக்கு தெரியவந்தது. எஸ்.ஐ., சிவலிங்கபெருமாள் சோதனை செய்த போது பதுக்கி வைத்திருந்த 74 ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினார். திருப்பாலைக்குடி கிழக்கு தெரு ரிபாய்தீன், அலாவுதீன், சிராஸ்தீன், ராசித் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடலில் வெடிக்க வைத்து மீன்கள் பிடிப்பதற்காக இந்த குச்சிகளை பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

6. மோதல்: 4 பேருக்கு கத்திக்குத்து
சிவகாசி : திருத்தங்கல் முத்துராமன் சந்து பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் 40. அதே பகுதியில் பத்திரிகை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதி தினேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

தினேஷ் நேற்று மாலை ராஜேஸ்கண்ணன் கடை அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரின் ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராஜேஷ்கண்ணன் 40, அசோக்குமார் 42, கணசேன் 50, ஜெயவேல்முருகனுக்கு40, கத்திக் குத்து விழுந்தது. காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


இந்தியாவில் குற்றம் :


1. மோசடி வழக்கில் 3 பேர் சிக்கினர்
புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள், சில நாட்களுக்கு முன், வீட்டில் இருந்த பழைய சோபாவை, 'ஆன்லைனில்' விற்க முயன்றார். அப்போது, அவரது வங்கி கணக்கில் இருந்த, 34 ஆயிரம் ரூபாய் மாயமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சஜித், கபில் மற்றும் மன்வேந்திரா ஆகியோரை நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மற்றொருவரை தேடி வருகின்றனர்.


latest tamil news2. தொழில் அதிபர் கைது
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், ஓம்கார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீதான பண மோசடி வழக்கில், கமல் கிஷோர் குப்தா, பாபுலால் வர்மா உள்ளிட்டோர் ஏற்கனவே அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகரும், தொழில் அதிபருமான சச்சின் ஜோஷி என்பவர், தற்போது கைது செய்ப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

3. ரவுடி சுட்டுக்கொலை
லக்னோ: உத்தர பிரதேசத்தில், ஒரு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி கிர்தாரி விஷ்வகர்மா, 40, நேற்று காலை, போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பினார். பின், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், கிர்தாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.


latest tamil news

உலக நடப்பு


சூச்சியின் வீட்டுக்காவல் நாளை வரை நீட்டிப்பு
யாங்கூன் : மியான்மரில், ஆங் சன் சூச்சியின் வீட்டுக்காவல், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇதற்கிடையே, ராணுவ ஆட்சியை திரும்பப் பெற வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரியும், மியான்மர் மக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆங் சன் சூச்சியின் வீட்டுக்காவல், நேற்றுடன் முடிவதாக இருந்த நிலையில், அதை நாளை வரை நீட்டித்து, ராணுவம் அறிவிப்பு வெளியிட்டது. 'வாக்கி டாக்கி' எனப்படும், தகவல் தொடர்பு கருவிகளை முறைகேடாக வாங்கியதாக, சூச்சி மீது புகார் உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், நாளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சூச்சி ஆஜராக உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X