தமிழ்நாடு

படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்- கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

Added : பிப் 16, 2021
Share
Advertisement
அண்ணாசாலை-பாரிமுனை - மந்தைவெளி வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.தற்போது, கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ளதால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.அலுவலகம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்-  கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

அண்ணாசாலை-பாரிமுனை - மந்தைவெளி வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.தற்போது, கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ளதால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.அலுவலகம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனினும், பெரும்பாலான வழித்தடங்களில், குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாரிமுனை - மந்தைவெளி இடையே இயக்கப்படும் தடம் எண், 21 பேருந்து சேவை அதிகரிக்கப்படாததால், அந்த பேருந்தில், படிக்கட்டுகளில் தொங்கிய படி, ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர். இதனால், விபத்து, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:கொரோனா பரவல் வேகம் குறைந்து, பெரும்பாலானோர் அலுவலகம் செல்வதால், பேருந்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பாரிமுனையிலிருந்து, நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இன்னும் பழைய எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை. பாரிமுனை - மந்தைவெளி இடையே இயக்கப்படும், தடம் எண், 21ல் அதிக அளவிலான பயணியர் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதானால், மீண்டும் கொரோனா பரவல் வேகத்தை அதிகரிப்பதோடு, விபத்து நேரவும் வாய்ப்புள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளை, கொரோனா காலத்திற்கு முன் இயக்கிய எண்ணிக்கையில் மீண்டும் தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X