சிவகங்கை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன், பிரபாகரனின் காதணி மற்றும் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
குலதெய்வ கோவிலான சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவிலில் நடந்த விழாவில், பங்கேற்ற கட்சியினர், தொண்டர்களுக்கு சீமான், 108 ஆடுகள் வெட்டி கறிவிருந்து அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: விவசாயி மட்டும் தான், உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. இந்த நிலை மாறாத வரை, அரசு பயிர்கடன் தள்ளுபடி செய்தாலும், விவசாயிகள் மீண்டும் கடனாளியாகவே மாறுவர்.சசிகலா வருகை, அ.தி.மு.க.,வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி எட்டு கோடி தமிழர்களிடம் மட்டுமே, கூட்டணி வைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, தமிழகம் வெற்றி நடைபோடும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE