அரசியல் செய்தி

தமிழ்நாடு

கனிமொழி முன் இப்படியா திட்டுவது? பெண்கள் முகம்சுளிப்பு

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (85)
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழி முன், மாவட்ட செயலாளர், தொண்டர்களை தகாத வார்த்தையால் திட்டினார்.தி.மு.க., எம்.பி., கனிமொழி, திருப்பூரில், 12ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த குமரன் ரோட்டில், வாகனத்தில் இருந்து இறங்கிய கனிமொழி, நடந்து சென்று, மக்களிடம் ஸ்டாலின் படத்தை வினியோகித்து பிரசாரம் செய்தார்.ஒரு
கனிமொழி, பெண்கள், முகம்சுளிப்பு

திருப்பூர் : திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழி முன், மாவட்ட செயலாளர், தொண்டர்களை தகாத வார்த்தையால் திட்டினார்.

தி.மு.க., எம்.பி., கனிமொழி, திருப்பூரில், 12ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த குமரன் ரோட்டில், வாகனத்தில் இருந்து இறங்கிய கனிமொழி, நடந்து சென்று, மக்களிடம் ஸ்டாலின் படத்தை வினியோகித்து பிரசாரம் செய்தார்.ஒரு துணிக்கடை முன் கனிமொழி சென்றபோது, அவரை கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். இதைப்பார்த்து 'டென்ஷனான' திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்வராஜ், கையை நீட்டி 'தகாத' வார்த்தைகளால் ஆக்ரோஷமாக, சத்தம் போட்டார்.


சமீபத்தில் திருப்பூருக்கு வந்திருந்தார் கனிமொழி. பிசியான குமரன் ரோட்டில் நடந்து சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். ஒரு துணிக்கடை முன் கனிமொழி சென்றபோது, அவரை தொண்டர்கள் சூழ்ந்தனர். இதை பார்த்து டென்ஷன் ஆனார் மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ். தகாத வார்த்தையால் திட்டி அவர்களை விரட்டினார். கனிமொழி அருகில் இருந்ததை பொருட்படுத்தாமல், அவர் திட்டியது அங்கிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது. ஆனால், கனிமொழி எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், தொண்டர்களை தவறாக ஏதும் பேசவே இல்லை என்று சமாளிக்கிறார் செல்வராஜ்.

latest tamil news



கனிமொழி அருகில் இருந்ததையும் பொருட்படுத்தாமல், திட்டியது அருகிலிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது. தனது முன்னிலையிலேயே, மாவட்ட செயலாளர் தகாத வார்த்தையால் தொண்டரை திட்டியதை, கனிமொழி கண்டுகொள்ளவும் இல்லை; அவரை கண்டிக்கவும் இல்லை. தற்போது இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.


'அப்படி பேசவேயில்லை...'


மாவட்ட செயலாளர் செல்வராஜ் கூறுகையில், ''அந்த இடத்தில், மிகவும் கூட்டமாக இருந்தது. நான் சொல்ல சொல்ல யாரும் கேட்கவில்லை. அதனால், தொண்டர்களை 'ஏப்பா, அறிவே இல்லையா?' என்றுதான் பேசினேன். மற்றபடி தவறாக ஏதும் பேசவில்லை. என்னை பிடிக்காதவர்கள், தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
22-பிப்-202120:59:08 IST Report Abuse
madhavan rajan தவறாக பேசுவதை ரசிக்கும் குடும்பம்தான் கனியின் குடும்பம். முக வே கூட்டத்தில் தீப்பொறி போன்றவர்கள் அசிங்கமாகப் பேசும்போது தலையாட்டி ரசிப்பார். வம்சா வழி ரசிப்புதான் அது.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-202113:23:15 IST Report Abuse
Malick Raja அறிவுடையோருக்கு ஏற்புடையதன்றல்லவே ..
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
21-பிப்-202104:14:50 IST Report Abuse
meenakshisundaram அவர் கனி மொழி மேலேயிருந்த ஆத்திரத்தைத்தான் இப்படி வார்த்தகளில் வெளிப்படுத்தி இருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X