இலங்கை, நேபாளத்தில் பா.ஜ., ஆட்சி; அமித்ஷாவின் அடுத்த அதிரடி இலக்கு

Added : பிப் 16, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: ''பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை அமைப்பதுடன், அண்டை நாடுகளான நேபாளம், இலங்கையிலும், பா.ஜ., அரசு அமைய வேண்டும் என்பதே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இலக்கு,'' என, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கூறியுள்ளார்.பா.ஜ.,வைச் சேர்ந்த, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், தனியார், 'டிவி' ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த, 2018ல்,
AmitShah, Nepal, Sri Lanka, BJP, Tripura CM, Biplab Kumar Deb, நேபாளம், இலங்கை, பாஜக, ஆட்சி, அமித்ஷா, திரிபுரா, முதல்வர்,

புதுடில்லி: ''பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை அமைப்பதுடன், அண்டை நாடுகளான நேபாளம், இலங்கையிலும், பா.ஜ., அரசு அமைய வேண்டும் என்பதே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இலக்கு,'' என, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கூறியுள்ளார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், தனியார், 'டிவி' ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த, 2018ல், திரிபுரா சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து, அப்போது கட்சியின் தேசிய தலைவராக இருந்த, அமித் ஷாவை சந்தித்தோம். கட்சியின் வட கிழக்கு பிராந்திய செயலர் அஜய் ஜாம்வாலும் உடனிருந்தார். நாட்டின் பல மாநிலங்களில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது குறித்து, அஜய் ஜாம்வால் குறிப்பிட்டார்.


latest tamil news



அதற்கு, 'நேபாளம், இலங்கையிலும் பா.ஜ.,வுக்கு கட்டமைப்பை ஏற்படுத்தி, ஆட்சியை பிடிக்க வேண்டும்' என, அமித் ஷா கூறினார். உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக, பா.ஜ.,வை மாற்றியவர், அமித் ஷா. கேரளாவில், கம்யூனிஸ்ட் மற்றும் காங்., மாறி மாறி ஆட்சி அமைப்பதை மாற்றுவோம். அங்கு, பா.ஜ., அரசை அமைப்போம்.மேற்கு வங்கத்தில், வரும் தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., தோல்வி அடையும்; பா.ஜ., ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
17-பிப்-202104:42:43 IST Report Abuse
Siva Kumar கிறுக்கு பசங்க.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-பிப்-202123:05:02 IST Report Abuse
தமிழவேல் வாங்கி போடுங்க...
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
16-பிப்-202122:57:26 IST Report Abuse
sethusubramaniam என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X