பொது செய்தி

இந்தியா

தனியார்மயமாக்கலுக்கு 4 வங்கிகள் தேர்வு

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில், முதற்கட்டமாக, நான்கு வங்கிகளில் பங்கு விலக்கலை மேற்கொள்ள, அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பலவற்றை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, நான்கு வங்கிகளை தனியார்மயமாக்க உள்ளது. பேங்க் ஆப்
Shortlists, FourBanks, PotentialPrivatisation, Government, வங்கிகள், தனியார்மயம், மத்திய அரசு

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில், முதற்கட்டமாக, நான்கு வங்கிகளில் பங்கு விலக்கலை மேற்கொள்ள, அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பலவற்றை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, நான்கு வங்கிகளை தனியார்மயமாக்க உள்ளது. பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய நான்கு வங்கிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.


latest tamil news


நடப்பு நிதியாண்டிற்குள், இரண்டு வங்கிகளில் பங்கு விலக்கல் நடவடிக்கையை பூர்த்தி செய்துவிட, அரசு முடிவு செய்துள்ளது. முதலில், சிறிய மற்றும் நடுத்தர, தர அளவிலான வங்கிகளில் பங்கு விலக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அரசு விரும்புகிறது. இம்முயற்சிகள் வெற்றிகரமாக அமைவதை பொறுத்து, அடுத்த கட்டமாக, பெரிய வங்கிகளை தனியார்மயமாக்க இருக்கிறது. ஆனால், அதேசமயம், நாட்டின் மிகப் பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., வங்கியில், தன்னுடைய பெரும்பான்மையான பங்குகளை அரசே வைத்துக் கொள்ளும். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
17-பிப்-202100:59:14 IST Report Abuse
nagendirank தனியார் மயம் வரவேற்க தக்கது . அரசு அலுவலர்கள் கடமையை செய்ய சம்பளம் மற்றும் கிம்பளமும் கேட்கிறார்கள்.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
16-பிப்-202119:42:52 IST Report Abuse
Vittalanand IOB யா அரசின் ஒய்வூதியம் பெருப்பவர்ககளின் பாடு என்னவாக்குமோ1
Rate this:
Cancel
Jay - Bhavani,இந்தியா
16-பிப்-202119:16:41 IST Report Abuse
Jay அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்களும் சோம்பேறித்தனமும் அரசு வங்கிகளிலும் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. இந்த அரசு வங்கிகள் விரைவில் பல நஷ்டங்களை உருவாக்கும், சீக்கிரமே தனியார் மயமாக்குவது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X